முகப்பு /கோயம்புத்தூர் /

6 முதல் 60 வரை.. கோவையில் அசத்தல் ஒயிலாட்டம்!

6 முதல் 60 வரை.. கோவையில் அசத்தல் ஒயிலாட்டம்!

X
ஒயிலாட்டம்

ஒயிலாட்டம்

Coimbatore oyilattam | கோவையில் 6 வயது முதல் 60 வயது வரை உள்ள பொதுமக்கள் இணைந்து ஒயிலாட்டம் ஆடிய நிகழ்வு அனைவரது கவனத்தையும் ஈர்த்துள்ளது.

  • 1-MIN READ
  • Last Updated :
  • Coimbatore, India

தமிழர்களின் பாரம்பரிய கலைகளுள் ஒன்றான ஒயிலாட்டம் குறித்து பொதுமக்கள் மத்தியில் விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாகவும், இதனை சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் அறிந்து கொள்ளும் விதமாகவும் கோவையில் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது,

தனியார் கல்லூரி வளாகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் 6 வயது குழந்தை முதல் 60 வயது முதியவர்கள் வரை கலந்துகொண்டு ஒயிலாட்டம் ஆடினர். கல்லூரி வளாக மைதானத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் நடைபெற்ற இந்த ஒயிலாட்ட நிகழ்வில் 500க்கும் மேற்பட்டவர்கள் கலந்து கொண்டு வட்டவடிவில் நின்று அனைவரும் ஒரு சேர ஒயிலாட்டம் ஆடினர்.

நாட்டுப்புற பாடகர் குழுவினர் பாரம்பரிய பாடல்களை பாட சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை ஒரே போல் ஒயிலாட்டம் ஆடியது அனைவரது கவனத்தையும் ஈர்த்தது.

First published:

Tags: Coimbatore, Dance, Local News