Home /coimbatore /

பொள்ளாச்சியில் இளைஞர்களுக்கு இலவச திறன்மேம்பாட்டு பயிற்சி- விவரங்களைத் தெரிந்துகொள்ளுங்கள் 

பொள்ளாச்சியில் இளைஞர்களுக்கு இலவச திறன்மேம்பாட்டு பயிற்சி- விவரங்களைத் தெரிந்துகொள்ளுங்கள் 

மாதிரிப் படம்

மாதிரிப் படம்

கோயம்புத்தூர் மாவட்டம் பொள்ளாச்சியில் நாளை இளைஞர்களுக்கு இலவச திறன் மேம்பாட்டு பயிற்சி நடைபெறவுள்ளது.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
    பொள்ளாச்சி வடக்கு வட்டாரத்தில் தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம் சார்பில் நாளை இளைஞர் திறன் திருவிழா நடைபெறுகிறது. இதில் இளைஞர்களுக்கு சுய தொழில் பயிற்சி அளிக்கப்படுகிறது. இலவசமாக வழங்கப்படும் பயிற்சியில் எப்படி பங்கேற்கலாம்.

    இந்த பயிற்சி முகாமில் கிடங்கு மேற்பாா்வையாளா், சில்லறை வணிகம், ஆண்ட்ராய்டு கைப்பேசி, ஆப்ரேட்டா், நிட்டிங் மெஷின் ஆப்ரேட்டா், கேட்டரிங் சா்வீஸ், தையல், மெழுகுவா்த்தி, மசாலா பொருள்கள் தயாரிப்பு, பேஷன் நகைகள் தயாரிப்பு குறித்த பயிற்சிகள் அளிக்கப்படும்.

    8ம் வகுப்பு முதல் பட்டப் படிப்பு வரை படித்த இளைஞா்கள் பங்கேற்கலாம். காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை நடக்கிறது. வயது வரம்பு 18 முதல் 45 வயதுக்குள் இருக்க வேண்டும்.

    கல்விச் சான்றிதழ், ஆதாா் எண், சுயவிவரம், புகைப்படம் உள்ளிட்டதேவையான ஆவணங்களை கொண்டுவர வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
    Published by:Karthick S
    First published:

    Tags: Coimbatore, Local News

    அடுத்த செய்தி