ஹோம் /கோயம்புத்தூர் /

நவராத்திரி விழா தாக்கம்: கோவை பூ மார்க்கெட்டில் பூக்கள் விலை கடும் உயர்வு

நவராத்திரி விழா தாக்கம்: கோவை பூ மார்க்கெட்டில் பூக்கள் விலை கடும் உயர்வு

பூ

பூ மார்க்கெட்

Coimbatore flower market | நவராத்திரி பண்டிகையையொட்டி கோவை பூ மார்க்கெட்டில் பூக்கள் விலை இரண்டு மடங்கு அதிகரித்துள்ளது.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Coimbatore, India

கோவை ஆர்.எஸ்.புரம் அருகே பூ மார்க்கெட் உள்ளது. இங்கு உள்ளூர் மட்டுமல்லாமல் வெளியூர், வெளி மாவட்டம் மற்றும் வெளி மாநிலங்களில் இருந்தும் பூக்கள் விற்பனைக்கு வருகின்றன. இங்கு மொத்தமாகவும், சில்லறையாகவும் பல்வேறு விதமான பூக்கள் விற்பனையாகி வருகின்றன.

கோவை பூ மார்க்கெட்டில் இருந்து அண்டை மாநிலமான கேரளாவுக்கும் அதிகளவில் பூக்கள் அனுப்பப்பட்டு வருகின்றன. இதனிடையே இம்மாத தொடக்கத்தில் கேரளாவில் ஓணம் பண்டிகை கொண்டாடப்பட்டது.

இந்தப் பண்டிகையின் போது மலையாளம் மொழி பேசுபவர்கள் தங்களின் வீடுகளின் முன்பு பூக்களினால் கோலம் போடுவது வழக்கம். இதன் காரணமாக மாதத்தின் தொடக்கத்திலேயே பூக்கள் விலை கடுமையாக உயர்ந்திருந்தது. மல்லிகைப்பூ மட்டும் கிலோ 4,000 ரூபாய் வரை விற்பனையானது.

இந்தச் சூழலில் தற்போது நவராத்திரி பண்டிகை தொடங்கியுள்ளது. இந்த பண்டிகைக் காலத்தில் மக்கள் 10 நாட்கள் வீட்டில் கொலு அமைத்து தெய்வங்களுக்கு மலர்கள் தூவி வழிபாடு செய்வது வழக்கம்.

இதனால் கடந்த இரண்டு வாரங்களாக குறைந்திருந்த பூக்கள் விலை தற்போது மீண்டும் அதிகரித்துள்ளது. 1,000 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டு வந்த ஒரு கிலோ மல்லிகைப்பூ தற்போது 2,000 ரூபாய் வரை விற்பனையாகிறது.

முல்லை ஒரு கிலோ 800 ரூபாய்க்கும், செவ்வந்தி ஆரஞ்சு 150 ரூபாய்க்கும், செவ்வந்தி மஞ்சள் 130 ரூபாய்க்கும், வாடாமல்லி 200 ரூபாய்க்கும் விற்பனையாகிறது.

மேலும், தாமரை ஒன்று 10 ரூபாய்க்கும், அரளிப்பூ 250 ரூபாய்க்கும், துளசி 40 ரூபாய்க்கும், மரிக் கொழுந்து ஒரு கட்டு 50 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

அடுத்து ஆயுத பூஜை, சரஸ்வதி பூஜை உள்ளிட்ட பண்டிகைகள் வர உள்ளதால் பூக்கள் விலை குறைய வாய்ப்பில்லை என்றும், அதிகரிக்கவே வாய்ப்பு உள்ளதாகவும் வியாபாரிகள் தெரிவிக்கின்றனர்.

Published by:Karthick S
First published:

Tags: Coimbatore, Local News