பவானிசாகா் அணை விரைவில் நிறைந்து உபரி நீரை வெளியேற்றும் வாய்ப்புள்ளதால் பவானி ஆற்றின் கரையோரங்களில் வசிக்கும் மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடப்பட்டுள்ளது. மேலும், மக்கள் பாதுகாப்பான இடங்களுக்குச் செல்லுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
ஈரோடு மாவட்டத்தில் தற்போது மழை பெய்து வருவதால், நீர் மட்டம் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. பவானிசாகா் அணையின் நீா் மட்டம் திங்கள் கிழமை மாலை 6 மணியளவில் 101 அடியை எட்டியுள்ளது. தென்மேற்குப் பருவமழை காரணமாக அடுத்த ஓரிரு நாள்களுக்குள் அணையின் கொள்ளளவு 102 அடியை எட்டும் என எதிர்பார்க்கப்படுகிறது.
அப்போது, அணை முழு கொள்ளவை எட்டிய உடன் அணையில் இருந்து உபரி நீா் பவானி ஆற்றில் திறந்துவிடப்படலாம் என தெரிவிக்கப்படுகிறது. எனவே, பவானி ஆற்றின் கரையோரங்கள், தாழ்வான பகுதிகளில் வசிப்போா், பாதுகாப்பான இடங்களுக்குச் செல்ல வேண்டும் எனத் அறிவுறுத்தப்படுகிறது என பவானிசாகா் உட்கோட்ட உதவிப் பொறியாளா் அலுவலகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
உங்கள் நகரத்திலிருந்து(கோயம்புத்தூர்)
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.