Home /coimbatore /

நொய்யல் ஆற்றில் வெள்ளப்பெருக்கு... கோவையிலுள்ள தடுப்பணைகளில் தீவிர கண்காணிப்பு

நொய்யல் ஆற்றில் வெள்ளப்பெருக்கு... கோவையிலுள்ள தடுப்பணைகளில் தீவிர கண்காணிப்பு

மாதிரிப் படம்

மாதிரிப் படம்

மேற்கு தொடர்ச்சி மலை பகுதிகளில் பெய்து வரும் மழையால் கோவை நொய்யல் ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. ஆற்றில் வினாடிக்கு 710 கன அடி தண்ணீர் செய்வதால் வெள்ளலூர் தரைப்பாலம் மூழ்கியது.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Coimbatore, India
    கோவை மாவட்டத்தில் இந்த ஆண்டு தென்மேற்கு பருவமழை வழக்கத்தை விட அதிகமாக பெய்துவருகிறது. கோயம்புத்தூரை ஒட்டியுள்ள மேற்கு தொடர்ச்சி மலை மற்றும் அடிவாரப்பகுதிகளில் பலத்த மழை பெய்து வருகிறது. இந்த மழையால் நொய்யல் ஆற்றில் வெள்ளம் கரைபுரண்டு ஓடுகிறது.

    வெள்ளியங்கிரி மலை அடிவாரத்தில், சிற்றோடைகள் இணைந்து உருவெடுக்கும் இந்த நொய்யல் ஆறானதுகிழக்கு நோக்கி பேரூர், குனியமுத்தூர், வெள்ளலூர், இருகூர், சூலூர், மங்கலம், திருப்பூர், ஒரத்துப்பாளையம் என 180 கிலோ மீட்டர் பயணித்து கரூர் அருகே நொய்யல் கிராமத்தில் காவிரி ஆற்றுடன் கலக்கிறது.

    இந்த ஆற்றில் தற்போதுவினாடிக்கு 710 கன அடி தண்ணீர் பாய்ந்தோடுகிறது. மேலும் சித்திரைச்சாவடி, குனியமுத்தூர் தடுப்பணை, புட்டுவிக்கி தடுப்பணை, சுண்ணாம்பு காளவாய் தடுப்பணை உள்ளிட்ட தடுப்பணைகளில் தண்ணீர் நிரம்பி வழிகிறது.

    இது குறித்து பொதுப்பணித்துறை அதிகாரி, கோவையில் இந்த ஆண்டு தென்மேற்கு பருவமழை நன்றாக பெய்துள்ளது. கோவை நொய்யல் ஆற்றின் ஓரத்தில் உள்ள வேடப்பட்டி புதுக்குளம், கோளராம்பதி குளம், நரசாம்பதி குளம், குறிச்சி குளம், வெள்ளலூர் குளம் உள்ளிட்ட பல்வேறு குளங்கள் தண்ணீர் நிரம்பி காணப்படுகிறது.

    மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் பலத்த மழை பெய்ததால் நொய்யல் ஆற்றில் வினாடிக்கு 710 கன அடி தண்ணீர் வரத்து காணப்பட்டது. குளங்கள் அனைத்தும் நிரம்பி விட்டதால் நொய்யல் ஆற்று தண்ணீர் வேறு எங்கும் திருப்பி விடப்படவில்லை. இதனால் நொய்யலில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு வெள்ளலூர் தரைப்பாலம் தண்ணீரில் மூழ்கியது. தென்மேற்கு பருவமழை இந்த மாத இறுதியில் முடிய வாய்ப்பு உள்ளது. தொடர்ந்து மழை பெய்து வருவதால் நொய்யல் ஆற்றில் உள்ள தடுப்பணைகளை தீவிரமாக கண்காணித்து வருகிறோம் என்று தெரிவித்துள்ளார்.

    இந்நிலையில், நொய்யல் ஆற்றில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கால் வெள்ளலூர் தரைப்பாலம் தண்ணீரில் மூழ்கியதால் அந்த வழியாக போக்குவரத்து நிறுத்ததப்பட்டது.
    Published by:Karthick S
    First published:

    Tags: Coimbatore, Local News

    அடுத்த செய்தி