இளைஞர்கள் சுற்றுலா செல்ல அதிகமாக விரும்பும் ஊர் கோவா. யூனியன் பிரதேசமான இந்த ஊரில் வரி குறைவு என்பதாலும், கடற்கரை, கோட்டைகள், பழமை வாய்ந்த தேவாலயங்கள் இருப்பதாலும், கோவா செல்ல ஆசைப்படுபவர்கள் ஏராளம். கோவாவை பொறுத்தவரை வடக்கு கோவா மற்றும் தெற்கு கோவா என்று 2 பகுதிகள் உள்ளன. இரு பகுதிகளிலும் வெவ்வேறு விதமான சுற்றுலா பகுதிகள் உள்ளன. கோவையில் இருந்து தெற்கு கோவா செல்வதற்கு ரயில் மற்றும் விமான சேவைகள் ஏற்கனவே உள்ளன.
கோவா மாநிலத்தை பொறுத்தவரை பெரும்பாலான விமானங்கள் தெற்கு கோவாவில் அமைந்துள்ள பனாஜி விமான நிலையத்திற்கே இயக்கப்பட்டு வருகின்றன. இந்நிலையில், வடக்கு கோவாவில் மோபா என்ற இடத்தில் புதிய விமான நிலையம் அமைக்கப்பட்டுள்ளது. இண்டிகோ நிறுவனத்தின் சார்பில் கோவையில் இருந்து வடக்கு கோவா மோபா பகுதிக்கு விமான சேவை இயக்கப்படுகிறது.
வாரத்தில் திங்கட்கிழமை, வெள்ளிக்கிழமை மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் கோவை சர்வதேச விமான நிலையத்தில் இருந்து பகல் 1:10 மணிக்கு விமானம் புறப்பட்டு பகல் 2:30 மணிக்கு விமானம் வடக்கு கோவா சென்றடைகிறது. அதேபோல் மோபாவில் இருந்து புறப்பட்டு பகல் 2:30 மணிக்கு கோவை சர்வதேச விமான நிலையத்திற்கு வந்தடைகிறது.
இதையும் படிங்க : காக்கா பிரியாணிக்காக வேட்டையா..? - கொத்து கொத்தாக காகங்களை கொன்ற நபர்..!
அத்துடன் புதன்கிழமைகளில் மாலை 6:40 மணிக்கு கோவை சர்வதேச விமான நிலையத்தில் இருந்து விமானம் புறப்படும். மோபாவில் இருந்து இரவு 8 மணிக்கு புறப்பட்டு கோவை சர்வதேச விமான நிலையத்தை வந்தடைகிறது. டிக்கெட் விலை விவரங்கள் விரைவில் அறிவிக்கப்பட உள்ளது குறிப்பிடத்தக்கது.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Coimbatore, Goa, Local News