ஹோம் /கோயம்புத்தூர் /

Coimbatore News : கொடிசியா அரங்கில் ஒரே நேரத்தில் திருக்குறள் வாசித்த 5 ஆயிரம் மாணவர்கள்..

Coimbatore News : கொடிசியா அரங்கில் ஒரே நேரத்தில் திருக்குறள் வாசித்த 5 ஆயிரம் மாணவர்கள்..

கோவை

கோவை - திருக்குறள் வாசித்த மாணவர்கள்

Coimbatore Latest News : கோவை கொடிசியா வளாகத்தில் பள்ளி மாணவர்கள் இணைந்து 5 ஆயிரம் பேர் திருக்குறள் வாசித்தனர்.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Coimbatore, India

கோவை கொடிசியா வளாகத்தில் 6வது புத்தக கண்காட்சி நடைபெற்று வருகின்றது. மாவட்ட நிர்வாகம், கொடிசியா, தென்னிந்திய பதிப்பாளர்கள் இணைந்து இந்த புத்தக திருவிழாவை நடத்துகின்றனர். 31ம் தேதி வரை நடைபெறும் இந்த திருவிழாவில் பல்வேறு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகின்றன. அதன் ஒரு பகுதியாக பள்ளி மாணவ, மாணவிகள் 5 ஆயிரம் பேர் இணைந்து திருக்குறள் ஒப்புவிக்கும்  "திருக்குறள் திரள் வாசிப்பு" நிகழ்ச்சி நடைபெற்றது.

திருக்குறள் வாசித்த மாணவர்கள்

கோவை மாநகரில் உள்ள அரசு மற்றும் தனியார் பள்ளி மாணவர்கள் 5 ஆயிரம் பேர் கொடிசியா வளாகத்தில் திருக்குறளின் ஒவ்வொரு அதிகாரத்தில் இருந்தும் 2 குறள்கள் என 10 அதிகாரங்களிலிருந்து 20 குறள்களை அனைத்து மாணவ மாணவிகளும் திரளாக வாசித்தனர்.

திருக்குறள் வாசித்த மாணவர்கள்

ஆசிரியர்கள் சொல்லச் சொல்ல திருக்குறள் வாசிக்கப்பட்டது. பின்னர் ஆசிரியர்கள் அக்குறளுக்கான விளக்கம் அளித்தனர்.

உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க

இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்ட அனைத்து மாணவர்களுக்கும் திருக்குறள் புத்தகம் வழங்கப்பட்டது. ஒரே நேரத்தில் 5 ஆயிரம் பேர் இணைந்து ஒரே மாதிரியாக திருக்குறளை வாசித்தது காண்போரை பிரமிப்பில் ஆழ்த்தியது.

Published by:Arun
First published:

Tags: Coimbatore, Local News, Thirukkural