ஹோம் /கோயம்புத்தூர் /

கோவை குளங்களில் டீசல் படகுகள்.. வாழ்வாதாரத்திற்காக மன்றாடும் மீனவர்கள்

கோவை குளங்களில் டீசல் படகுகள்.. வாழ்வாதாரத்திற்காக மன்றாடும் மீனவர்கள்

கோவை

கோவை

Coimbatore Fishermen : கோவை ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் ஒரு பகுதியாக உக்கடம் பெரியகுளம், வாளாங்குளம் மற்றும் குறிச்சி குளங்களில் படகுசவாரி விட மாநகராட்சி நிர்வாகம் முடிவு செய்துள்ளது. இந்த குளங்களில் டீசல் படகுகளை இயக்கினால் வாழ்வாதாரம் பாதிக்கும் என்கின்றனர் மீனவர்கள்..

மேலும் படிக்கவும் ...
  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :

கோவை மாநகரில் உள்ள குளங்களை சார்ந்து சுமார் 600 மீனவர்கள் உள்ளனர். மீனவர்கள் மட்டுமல்லாது மீன்பிடி தொழிலை நம்பி வியாபாரிகள், பாரம் தூக்கும் தொழிலாளர்கள் மற்றும் ஆட்டோ ஓட்டுநர்கள் என சுமார் 2 ஆயிரத்திற்கு மேற்பட்ட தொழிலாளர்கள் உள்ளனர்.

கோவை மாநகரில் உள்ள குளங்களை ஒப்பந்தம் எடுப்பவர்கள் மீனவர்களை வைத்து மீன் பிடித்து அதனை கோவை சுற்றுவட்டாரப்பகுதிகளில் விற்பனை செய்து வருகின்றனர்.

குளத்தில் அதிகப்படியான கழிவுகள் கலப்பதாலும், தற்போது பருவமழை பெய்து வரும் சூழலில் சீதோஷன நிலை மாற்றத்தால் மீன்கள் அவ்வப்போது உயிரிழந்து விடுவதால் மீனவர்கள் சிரமமடைந்துள்ளனர்.

மீனவர்கள், கோவை

ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் ஒரு பகுதியாக கோவை உக்கடம் பெரியகுளம், வாளாங்குளம் மற்றும் குறிச்சி குளத்தில் படகுசவாரி விட மாநகராட்சி நிர்வாகம் முடிவு செய்துள்ளது. இந்த குளங்களில் டீசல் படகுகளை இயக்கினால் மீன்களில் டீசல் வாசம் அடிக்கும் என்றும், இதனால் வாழ்வாதாரம் முடங்கிப்போகும் அபாயம் இருப்பதாகவும் குமுறல்களை தெரிவிக்கின்றனர் மீனவர்கள்.

மீனவர்கள், கோவை

புதிய திட்டங்களால் திட்டத்தால் சமூகத்தில் எந்த மக்களுக்கும் பாதிப்பு ஏற்படுத்தாத வகையில் திட்டத்தை செயல்படுத்தினால் அந்த திட்டம் மக்களால் கொண்டாடப்படும் என்பதில் மாற்றுக்கருத்து இல்லை.

மீனவர்கள், கோவை

இந்த சூழலில், டீசல் படகிற்கு பதிலாக மாற்று யோசனையை முன்னெடுத்து சாமானியர்களின் கோரிக்கைக்கு கோவை ஸ்மார்ட்சிட்டி நிர்வாகம் செவிசாய்க்குமா என்பதை பொறுத்திருந்து பார்க்கலாம்.

உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க

Published by:Arun
First published:

Tags: Coimbatore, Fishermen, Local News