ஹோம் /கோயம்புத்தூர் /

விஜய், அஜித் ரசிகர்களின் சண்டை நல்லது தான்! பிக் பாஸ் சனம் செட்டியின் பளிச் பதில்..!

விஜய், அஜித் ரசிகர்களின் சண்டை நல்லது தான்! பிக் பாஸ் சனம் செட்டியின் பளிச் பதில்..!

X
சனம்

சனம் செட்டி

Coimbatore shanam | கோவையில் நடைபெற்ற தனியார் நிகழ்ச்சி ஒன்றில் சிறப்பு அழைப்பாளராக பங்கேற்ற பிக் பாஸ் புகழ் நடிகை சனம் பேட்டியளித்துள்ளார்.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Coimbatore | Coimbatore

ரசிகர்களுக்கு இடையே நடைபெறும் போர் என்பது நல்ல விஷயம். ஆனால், ரசிகர்களிடையே நடைபெறும் போட்டி ஆரோக்கியமாக இருக்க வேண்டும் என்று நடிகை சனம் செட்டி தெரிவித்துள்ளார்.

கோவையில் நடைபெற்ற தனியார் நிகழ்ச்சி ஒன்றில் சிறப்பு அழைப்பாளராக பிக் பாஸ் புகழ் நடிகை சனம் செட்டி கலந்து கொண்டார். இதனைத் தொடர்ந்து அவர் நியூஸ் 18 உள்ளூர் செய்தித்தளத்திற்கு அளித்த பிரத்தியேக பேட்டியில், கோவைக்கு ஏற்கனவே வந்துள்ளேன். ஒவ்வொரு முறையும் கோவை வரும் போதும் சென்னையை விட்டு வந்தது போலவே இருக்காது. இங்குள்ள மக்கள் அன்பானவர்கள். அவர்களின் பேச்சு வழக்கு எனக்கு மிகவும் பிடிக்கும். கடந்த முறை கோவை வந்த போது ஷாப்பிங் செய்தேன். இந்த முறை இன்னும் அதிக இடங்களைச் சுற்றிப்பார்க்க திட்டமிட்டுள்ளேன்.

எதிர்வினையாற்று மற்றும் ரிட்டர்ன் என்ற இரண்டு படங்கள் நடித்து முடித்துள்ளேன். அடுத்தாண்டு இவைவெளியாகிவிடும். எங்கு சென்றாலும் விஜய், அஜித் குறித்து கேட்கிறார்கள். அவர்கள் இருவரும் நண்பர்கள் தான். நாம் ஏன் சண்டையிட வேண்டும்?

ரசிகர்களுக்கு இடையே நடைபெறும் போர் என்பது நல்ல விஷயம் தான். ரசிகர்கள் இல்லாமல் ஒரு படம் வெற்றி பெறாது. ரசிகர்களால் தான் நாங்கள். ரசிகர்களிடையே நடைபெறும் போட்டி ஆரோக்கியமாக இருக்க வேண்டும்.

தவறாக பேசுவது யாருக்குமே நல்லதல்ல. எனக்கு விஜய், அஜித் இருவரையும் பிடிக்கும். அவர்கள் படத்திற்காக காத்திருக்கிறேன். மிஸ் சவுத் இந்தியா என்ற பட்டத்தை கடந்த 2016ம் ஆண்டு பெற்றேன். அப்படியான டைட்டில்கள் மாடலிங் துறையில் உள்ள பெண்களுக்கு மிகவும் அவசியமான ஒன்றாக உள்ளது. அந்த டைட்டில் எப்போதும் அவர்களுடனேயே இருக்கும் என கூறினார்.

First published:

Tags: Actor Ajith, Actor Thalapathy Vijay, Coimbatore, Local News, Sanam Shetty