ஹோம் /கோயம்புத்தூர் /

கோவை டூ கோரக்பூர்.. அக். 11 முதல் பண்டிகை கால சிறப்பு ரயில் தொடக்கம்..!

கோவை டூ கோரக்பூர்.. அக். 11 முதல் பண்டிகை கால சிறப்பு ரயில் தொடக்கம்..!

மாதிரி படம்

மாதிரி படம்

பண்டிகை காலத்தை முன்னிட்டு கோயம்புத்தூரில் இருந்து உத்தரப்பிரதேச மாநிலம் கோராக்பூருக்கு சிறப்பு ரயில் இயக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Coimbatore | Coimbatore | Tamil Nadu | Gorakhpur | Gorakhpur

கோவையில் இருந்து உத்தரப்பிரதேசம் மாநிலம் கோராக்பூருக்கு அக்டோபர் 11 முதல் நவம்பர் 8ஆம் தேதி வரை சிறப்பு ரயில் இயக்கப்படுகிறது.

தீபாவளி உள்ளிட்ட பண்டிகை கால கூட்டம் கூட்ட நெரிசலை தவிர்க்கும் நோக்கில், ரயில்வே நிர்வாகம் சார்பில் சிறப்பு ரயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன.

அதன்படி, கோவையில் இருந்து (வ.எண் - 05304) வாரந்தோறும் செவ்வாய் கிழமை காலை 4:40 மணிக்கு புறப்படும் ரயிலானது வியாழன் காலை 8:35க்கு கோராக்பூர் சென்றடையும். இந்த ரயில், திருப்பூர், ஈரோடு, சேலம், காட்பாடி, பெரம்பூர், நெல்லுார், ஓங்கல், விஜயவாடா, நாக்பூர் உள்ளிட்ட ஸ்டேஷன்களில் நின்று செல்லும்.

இதேபோல, கோராக்பூரில் இருந்து( வ.எண் - 05303) வாரந்தோறும் சனிக்கிழமை காலை 8:30 மணிக்குப் புறப்படும் சிறப்பு ரயிலானது, திங்கட் கிழமை காலை 7:25க்கு கோவை வந்தடையும்.

இதையும் படிங்க | கோவை வெள்ளலூர் பகுதி மக்களுக்கு விடியல் பிறக்கிறது..

அக்டோபர் 8 ஆம் தேதி முதல் நவம்பர் 5ஆம் தேதி வரை இயக்கப்படும் இந்த ரயிலில், இரண்டாம் வகுப்பு ஏசி பெட்டி ஒன்று, மூன்றாம் வகுப்பு ஏசி இரண்டு, இரண்டாம் வகுப்பு படுக்கை வசதி பெட்டிகள் 10, முன்பதிவு இல்லாத பெட்டிகள் 7, என மொத்தம் 22 பெட்டிகள் இணைக்கப்பட்டிருக்கும் இவ்வாறு ரயில்வே நிர்வாகம் தெரிவித்துள்ளது.

Published by:Anupriyam K
First published:

Tags: Coimbatore, Gorakhpur S24p64, Kovai, Train