ஹோம் /கோயம்புத்தூர் /

ஆனைமலை நல்லாறு திட்டப் பணிகளை உடனே துவங்க வலியுறுத்தி கோவையில் விவசாயிகள் ஆர்ப்பாட்டம்

ஆனைமலை நல்லாறு திட்டப் பணிகளை உடனே துவங்க வலியுறுத்தி கோவையில் விவசாயிகள் ஆர்ப்பாட்டம்

ஆனைமலை

ஆனைமலை நல்லாறு திட்டம்

Anaimalai Nallaru Project | ஆனைமலை நல்லாறு திட்டப் பணிகளை தமிழக அரசு உடனே துவங்க வலியுறுத்தி கோவை தெற்கு தாலுகா அலுவலகம் முன்பு விவசாயிகள் சங்கத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Coimbatore | Coimbatore

கிடப்பில் போடப்பட்டுள்ள  ஆனைமலை நல்லாறு திட்டப் பணிகளை உடனே துவங்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கோவையில் விவசாயிகள் கோரிக்கை முழக்க ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

ஆனைமலை நல்லாறு திட்டப் பணிகள் துவங்கப்படாமல் உள்ளதைக் கண்டித்து தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தினர் நேற்று செவ்வாய்க்கிழமையன்று கோவை தெற்கு தாலுகா அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இந்த ஆர்ப்பாட்டத்திற்கு தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் கோவை மாவட்ட தலைவர் சு.பழனிச்சாமி தலைமை வகித்தார்.

இந்த ஆர்ப்பாட்டத்தில் விவசாயிகள் தங்களது கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்களை எழுப்பினர்.

மேலும் படிக்க:   மக்களை தேடி மருத்துவம் திட்டத்தில் பணியாற்ற விருப்பமுள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.! 

அப்போது, கிடப்பில் உள்ள ஆனைமலை நல்லாறு திட்டப் பணிகளை தமிழக அரசு உடனே துவங்க வேண்டும், பரம்பிக்குளம் ஆழியாறு பாசனப் பகுதி கரையோர விவசாயிகளின் கோரிக்கைகளை நிறைவேற்ற வேண்டும், விவசாயிகளின் கிணற்றில் உள்ள மின் இணைப்பைத் துண்டிக்கக் கூடாது என்று கோரிக்கைகளை முன் வைத்தனர்.

தொடர்ந்து தென்னைக்குத் தான் சோதனை, விவசாயிக்கு தான் வேதனை, தேங்காய், மட்டை, காலி தொட்டிக்கும் விவசாயத்துக்கும் விலை இல்லை உள்ளிட்ட கோஷங்களை எழுப்பினர்.

மேலும் படிக்க:  கோவையில் மாணவர்களை தேடிச்செல்கிறது நடமாடும் நூலகம்.. பொதுமக்களும் படிக்கலாம்.. எங்கெல்லாம் செல்கிறது தெரியுமா?

இதுகுறித்து தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் கோவை மாவட்ட தலைவர் சு.பழனிச்சாமி கூறுகையில், தண்ணீரை தவறாக பயன்படுத்தும் நபர்களை அடையாளம் கண்டு தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் மழைக்காலங்களில் நீர் திறப்பு பாசன கால்வாயை தவிர்த்து மற்ற பாசன கால்வாயில் உள்ள குளம், குட்டையை நீர் நிரப்ப ஆவணம் செய்ய வேண்டும் என்றும் கூறினார். மேலும், தற்போது பிஏபி பாசன நிலங்களில் பல நிலங்கள் தொழிற்சாலைகளாகவும், காற்றாலைகளாகவும் மாறி உள்ளதாகவும் இந்த நிலங்களை பாசன திட்டத்தில் இருந்து நீக்கி மூன்று மண்டலமாக மாற்ற வேண்டும் என்றும் தெரிவித்தார்.

உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க

இந்த ஆர்ப்பாட்டத்தில் ஆயிரத்திற்கு மேற்பட்ட விவசாயிகள் கலந்து கொண்டனர்.

Published by:Arun
First published:

Tags: Coimbatore, Local News