Home /coimbatore /

விவசாயிகளுக்கான நிதி பெறவேண்டுமா? இதை உடனடியாக புதுப்பித்துக் கொள்ளுங்கள்

விவசாயிகளுக்கான நிதி பெறவேண்டுமா? இதை உடனடியாக புதுப்பித்துக் கொள்ளுங்கள்

மாதிரிப் படம்

மாதிரிப் படம்

மத்திய அரசு சார்பில் விவசாயிகளுக்கு ஆண்டுதோறும் வழங்கப்படும் 6,000 ரூபாயை பெறுவதற்கு ஆவணங்களைப் புதுப்பிக்க வேண்டும்.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
    மத்திய அரசு சார்பில் பிரதமரின் கிசான் சம்மன் நிதி திட்டத்தில் விவசாயிகளுக்கு பணம் வழங்கப்படுகிறது. நிதி பெறும் விவசாயிகள் வேளாண் அலுவலகங்கள் மற்றும் ஆன்லைன் இ சேவை பட்டா, சிட்டா, உள்ளிட்டவைகளுடன் பதிவு செய்து கொள்ள வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.

    பிரதமரின் கிசான் சம்மன் நிதி திட்டத்தில், விவசாயிகளுக்கு ஆண்டுக்கு, 6000 ரூபாய் பெற, நிதியினை பெற்று வருபவர்கள் உடனடியாக தங்களது பதிவுகளை புதுப்பிக்க வேண்டியது அவசியம். புதுப்பிக்க தவறியவர்களுக்கு நிதி வழங்குவது நிறுத்தப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

    பதிவினை புதுப்பிக்க ஆதார் எண், வங்கி கணக்கு எண், நில உடமை ஆவணங்கள் ஏற்கனவே பதிவு செய்த மொபைல் எண் ஆகியவற்றை எடுத்துச்சென்று, பொதுசேவை மையங்களில் உடனடியாக புதுப்பித்துக் கொள்ளலாம்.

    வங்கி கணக்குடன், ஆதார் எண், மொபைல் எண் இணைத்திருக்க வேண்டும். இதுவரை இணைக்காதவர்கள் தற்போது இணைத்துக் கொள்ளலாம். தனியார் பொது சேவை மையங்களிலும் புதுப்பித்துக் கொள்ளலாம்.

    மனுதாரர் பெயரில் சிட்டா இருத்தல் வேண்டும். கூட்டு பட்டாவாகவும் இருக்கலாம். மனுதாரர் பதிவை புதுப்பிக்க, பொது சேவை மையங்களுக்கு நேரடியாக செல்ல வேண்டும். பயனாளிகள் கைரேகை வைக்க வேண்டும் என்பதால், ஒருவர் பெயரில் இருப்பதை மற்றவர்கள் புதுப்பிக்க இயலாது என பெரியநாயக்கன்பாளையம் வேளாண் அலுவலர் கோமதி, துணை வேளாண் அலுவலர் விஜய கோபால் ஆகியோர் தெரிவித்துள்ளனர்.
    Published by:Karthick S
    First published:

    Tags: Coimbatore, Local News

    அடுத்த செய்தி