ஹோம் /கோயம்புத்தூர் /

கோவையில் கிசான் நிதி 12 தவணை பெற விவசாயிகளின் நில ஆவணங்களை சமர்பிக்க கடைசி வாய்ப்பு.!

கோவையில் கிசான் நிதி 12 தவணை பெற விவசாயிகளின் நில ஆவணங்களை சமர்பிக்க கடைசி வாய்ப்பு.!

கோவை

கோவை

Coimbatore District | பிரதமரின் கிசான் நிதி 12 தவணையாக வழங்கப்படுகிறது. இதற்காக கோவை மாவட்ட விவசாயிகளிடம் இருந்து பெறப்பட்ட நில ஆவணங்கள், ஆதார் எண், வங்கி கணக்கு உள்ளிட்டவைகளை சாரி  பார்க்கப்பட இருக்கிறது. 

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Coimbatore, India

பிரதமரின் கிசான் நிதி 12 தவணையாக வழங்கப்படுகிறது. இதற்காக கோவை மாவட்ட விவசாயிகளிடம் இருந்து பெறப்பட்ட நில ஆவணங்கள், ஆதார் எண், வங்கி கணக்கு உள்ளிட்டவைகளை சாரி பார்க்கப்பட இருக்கிறது.

கோவை மாவட்ட வேளாண்மை இணை இயக்குநர் மு.ஷபி அஹமது வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது: கடந்த 2019ம் ஆண்டு தொடங்கப்பட்ட பி.எம்.கிசான் சம்மான் நிதி திட்டத்தில் 4 மாதங்களுக்கு ஒருமுறை விவசாயிகளின் வங்கி கணக்கில் ரூ.2 ஆயிரம் வரவு வைக்கப்பட்டது. நிலமுள்ள அனைத்து விவசாயிகளின் நிதி தேவையினை பூர்த்தி செய்யும் வகையில் தொடங்கப்பட்ட இந்த திட்டத்தில் இதுவரை விவசாயிகள் 11 தவணைகளாக தொகை பெற்று விவசாய பயன்பாட்டிற்காக பயன்படுத்தி உள்ளனர்.

இதையும் படிங்க: வால்பாறைக்கு சுற்றுலா போறீங்களா? உஷார்... வனத்துறை எச்சரிக்கை.!

தற்பொழுது 12வது தவணை தொகை பெறுவதற்கு செப்டம்பர் 30ம் தேதிக்குள் விவசாயிகளின் நில ஆவணங்களை சரிபார்க்க வேண்டும் என மத்திய அரசு தெரிவித்துள்ளது. அதன் அடிப்படையில் விவசாயிகளின் நில ஆவணங்களை சரிபார்க்கும் பணி கிராம வாரியாக அனைத்து வட்டார வேளாண்மை மற்றும் தோட்டக்கலை உதவி இயக்குநர் அலுவலகத்தில் நடக்கிறது. பி.எம்.கிசான் திட்டத்தின்கீழ் பயன்பெற்று வரும் விவசாயிகளில் இதுவரை 6572 விவசா யிகள் தங்களது நில ஆவணங்களின் அடிப்படையில் சரிபார்ப்பு செய்யவில்லை.

இந்த விவசாயிகள் உடனடியாக தங்களது நில உரிமையினை உறுதி செய்திட பட்டா, சிட்டா, ஆதார் நகல்களுடன் தங்களது வட்டார உதவி வேளாண்மை அல்லது உதவி தோட்டக்கலை அலுவலர்கள் அல்லது உதவி வேளாண் வணிகம் மற்றும் விற்பனை அலுவலர்களிடம் சமர்ப்பிக்க வேண்டும்.

உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க

2019 பிப்ரவரி 1க்கு முன்னரே நில உரிமையினை உறுதி செய்தால் மட்டுமே அடுத்த தவணை தொகை விடுவிக்கப்படும் என்று மத்திய அரசின் மூலம் தெரிவிக்கப்பட்டுள்ளது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Published by:Karthi K
First published:

Tags: Coimbatore, Local News