முகப்பு /கோயம்புத்தூர் /

கோவையில் காட்சிபடுத்தப்பட்ட பெண் கைவினை கலைஞர்களின் தயாரிப்புகள்!..

கோவையில் காட்சிபடுத்தப்பட்ட பெண் கைவினை கலைஞர்களின் தயாரிப்புகள்!..

X
சாரஸ்

சாரஸ் கண்காட்சி

Coimbatore News | இந்த கண்காட்சியில் 80க்கும் மேற்பட்ட ஸ்டால்கள் இடம் பெற்றுள்ள நிலையில் வரும் 8ஆம் தேதி வரை நடைபெறவுள்ளது.

  • News18 Tamil
  • 1-MIN READ
  • Last Updated :
  • Coimbatore, India

இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில் மகளிர் சுய உதவிக்குழுக்கள் தயாரித்த கைவினைப் பொருட்கள் மற்றும் வீட்டு உபயோக பொருட்கள் கண்காட்சி கோவையில் நடைபெற்று வருகிறது.

தமிழ்நாடு மகளிர் மேம்பாட்டு நிறுவனம் சார்பில் மகளிர் சுய உதவிக்குழுக்கள் தயாரிக்கும் பொருட்களின் சாரஸ் கண்காட்சி கோவை வ.உ.சி பூங்கா மைதானத்தில் தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்த கண்காட்சியை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.

இதில் தமிழகம், கேரளா, ஆந்திரா, கர்நாடகா, கோவா, தெலுங்கானா உள்ளிட்ட இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில் மகளிர் சுய உதவிக்குழுவினர் தயாரித்த கைவினைப் பொருட்கள், உணவுப் பொருட்கள், குழந்தைகளுக்கான விளையாட்டு பொருட்கள், வீட்டு உபயோகம் மற்றும் அலங்கார பொருட்கள் இடம்பெற்றுள்ளன.

உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க

ஒவ்வொரு மாநிலங்களிலும் உள்ள பெண்கள் முன்னேற்றத்திற்காகவும், மாநிலங்களின் பாரம்பரியத்தை மற்ற பகுதிகளுக்கும் கொண்டு சேர்க்கும் வகையிலும் அமைந்துள்ள இந்த கண்காட்சியில் 80க்கும் மேற்பட்ட ஸ்டால்கள் இடம் பெற்றுள்ளன.

பொருட்களை தயாரித்த பெண்களே அதனை நேரடியாக விற்பனை செய்வதால் குறைவான விலையில் நல்ல பொருட்கள் கிடைப்பதாக கண்காட்சியை பார்வையிட்ட பொதுமக்கள் தெரிவித்தனர். இந்த கண்காட்சியானது வரும் 8ம் தேதி வரை நடைபெற உள்ளது.

First published:

Tags: Coimbatore, Local News