ஹோம் /கோயம்புத்தூர் /

கோவையில் போர் நினைவுச்சின்னம் அமைக்க முன்னாள் ராணுவத்தினர் கோரிக்கை. 

கோவையில் போர் நினைவுச்சின்னம் அமைக்க முன்னாள் ராணுவத்தினர் கோரிக்கை. 

கோவை

கோவை

War Memorial at Coimbatore | முப்படை சேர்ந்த முன்னாள் வீரர்கள் குறை கேட்பு கூட்டம் கோவை எஸ்.என்.ஆர் கலை அரங்கத்தில் மாவட்ட ஆட்சியர் தலைமையில் நடைபெற்றது.

  • News18 Tamil
  • 2 minute read
  • Last Updated :
  • Coimbatore | Coimbatore

போரில் வீரமரணம் மற்றும் பணியின் போது உயிரிழந்த ராணுவ வீரர்களுக்கு நினைவஞ்சலி செலுத்தும் விதமாக கோவையில் போர் நினைவுச்சின்னம் அமைக்க வேண்டும் என்று முன்னாள் ராணுவ வீரர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

கோவை மாவட்டத்தில் ராணுவம், கடற்படை, விமானப்படை என முப்படைகளை சேர்ந்த முன்னாள் வீரர்கள் 12,500 பேர் வசித்து வருகின்றனர். இவர்கள் தங்களது குறைகளை கோவையில் உள்ள ராணுவ தலைமை அலுவலகத்திலும், மாவட்ட ஆட்சியர் தலைமையிலான குறைதீர்ப்பு கூட்டத்திலும் தெரிவித்து வந்தனர்.

இந்த சூழலில், மெட்ராஸ் ரெஜிமென்ட் சென்டர் மற்றும் தக்ஷின் பாரத் சார்பில் முப்படைகளை சேர்ந்த முன்னாள் வீரர்களுக்கும், உயிரிழந்த ராணுவ வீரர்களின் மனைவிகளுக்குமான பிரத்யேக சிறப்பு குறைதீர்ப்பு முகாம், கோவை எஸ்.என்.ஆர் கலை அரங்கத்தில் நடைபெற்றது.

மேலும் படிக்க: கோவையில் 500 ரூபாய் செலவில் சுவையான உணவுடன் ஆச்சரியமான இயற்கை சுற்றுலா!

இந்த குறைதீர்ப்பு முகாமில் முன்னாள் ராணுவ வீரர்கள், உயிரிழந்த ராணுவ வீரர்களின் மனைவிகள் என 50க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு ராணுவ உயர் அதிகாரிகள் மற்றும் கோவை மாவட்ட நிர்வாகத்திடம் தங்களது குறைகளை தெரிவித்தனர்.

இந்த முகாமில் ஓய்வூதியம், மருத்துவக்காப்பீடு, வேலைவாய்ப்பு உள்ளிட்டவற்றில் உள்ள குறைகளை நிவர்த்தி செய்யக்கோரி கோரிக்கை மனுக்கள் அளிக்கப்பட்டன.

மேலும் படிக்க:  கோவை குருந்தமலையில் உருவான ஹிட் திரைப்படங்களின் லிஸ்ட்- மனதை கொள்ளை கொள்ளும் இடம்!

கோவை மாவட்ட ஆட்சியர் சமீரன், மாநகராட்சி ஆணையர் பிரதாப் குமார், மெட்ராஸ் ரெஜிமெண்டல் கமெண்டன்ட் மற்றும் ராணுவ அதிகாரிகள் முன்னிலையில் நடைபெற்ற இந்த முகாமில் கலை நிகழ்ச்சிகளும் நடைபெற்றன.

இதுகுறித்து கோவை மாவட்ட முன்னாள் ராணுவ வீரர்கள் நலச்சங்கத்தின் மாவட்ட தலைவர் பாஸ்கரன் கூறுகையில், இந்த குறைதீர்ப்பு முகாமில் தங்களது நீண்டகால கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.

உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க

மேலும், போரின் போதும் பணியின் போதும் வீரமரணம் அடைந்த ராணுவ வீரர்களுக்கு நினைவஞ்சலி செலுத்துவதற்காக கோவையில் போர் நினைவுச் சின்னம் அமைக்க வேண்டும், முன்னாள் ராணுவ வீரர்களுக்கு வீட்டு வரி மற்றும் சுங்க கட்டணத்தில் இருந்து விலக்கு அளிக்க வேண்டும், வேலைவாய்ப்பில் முன்னுரிமை வழங்க வேண்டும் என்றுதெரிவித்தார்.

Published by:Arun
First published:

Tags: Coimbatore, Local News