முகப்பு /செய்தி /கோயம்புத்தூர் / இரு சக்கர வாகனத்தில் சென்ற பெண்ணின் நகை பறிப்பு... முன்னாள் ராணுவ வீரர் கைது..!

இரு சக்கர வாகனத்தில் சென்ற பெண்ணின் நகை பறிப்பு... முன்னாள் ராணுவ வீரர் கைது..!

கிரைம் செய்தி

கிரைம் செய்தி

கோவையில் இரு சக்கர வாகனத்தில் சென்று பெண்ணிடம் நகைப்பறிப்பில் ஈடுபட்ட முன்னாள் ராணுவ வீரரை துடியலூர் காவல் துறையினர் கைது செய்து விசாரித்து வருகின்றனர்.

  • Last Updated :
  • Coimbatore, India

கோவை வீரபாண்டிப்பிரிவ ஜோதிபுரம் பகுதியைச் சேர்ந்தவர் ராதாமணி. இவர் தனது மகனுடன் தனியார் மருத்துவமனைக்குச் சென்று விட்டு இருசக்கர வாகனத்தில் வீடு திரும்பிக் கொண்டு இருந்தார். மேட்டுப்பாளையம் சென்று கொண்டிருந்தபோது, மற்றொரு இரு சக்கர வாகனத்தில் பின்னால் வந்த இரண்டு நபர்கள் ராதாமணியின் கழுத்தில் அணிந்திருந்த 8 சவரன் தங்க செயினை பறித்துக் கொண்டு தப்பிச் சென்றனர்.

இருப்பினும் ராதாமணியின் மகன் அவர்களை இரு சக்கர வாகனத்திலேயே துரத்திச் சென்று, பொதுமக்கள் உதவியுடன் கொள்ளையர்களில் ஒருவரைப் பிடித்தார். மற்றொருவர் பறித்த தாலி செயினுடன் அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளார். பிடிபட்ட நபரை துடியலூர் காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர். துடியலூர் காவல்துறையினர் அவரிடம் விசாரணை மேற்கொண்ட போது, பிடிபட்ட நபர் ராமநாதபுரம் மாவட்டத்தைச் சேர்ந்த பழனிநாதன் என்பதும், முன்னாள் ராணுவ வீரர் என்பதும் தெரியவந்தது.

Also Read : வாயில் காயம்... சாப்பிட முடியாமல் தவித்த யானை உயிரிழப்பு! - பொள்ளாச்சி அருகே சோகம்!

ஒழுங்கின நடவடிக்கை காரணமாக 7 வருடங்களுக்கு முன் சஸ்பெண்ட் செய்யப்பட்டவர் என்பதும் , அவருடன் செயின் பறிப்பில் ஈடுபட்ட மற்றொரு நபர் ராமநாதபுரம் மாவட்டத்தைச் சேர்ந்த முருகானந்தம் என்பதும் தெரிய வந்தது.

முன்னாள் ராணுவ வீரர் பழனிநாதன் மீது வழக்குப் பதிவு செய்த காவல்துறையினர் அவரிடம் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.மேலும் தப்பிச்சென்ற முருகானந்தம் என்பவரைத் தேடி வருகின்றனர். முன்னாள் இராணுவ வீரர் செயின் பறிப்பில் ஈடுபட்டு கைதாகிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

top videos
    First published:

    Tags: Chain Snatching, Coimbatore, Crime News