ஹோம் /கோயம்புத்தூர் /

பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கோவையில் மின்வாரிய ஓய்வூதியர்கள் திடீர் அரை நிர்வாண போராட்டம்

பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கோவையில் மின்வாரிய ஓய்வூதியர்கள் திடீர் அரை நிர்வாண போராட்டம்

கோவை

கோவை போராட்டம்

Kovai News | மத்திய அரசின் 2022 சட்ட மசோதா திருத்தத்தை தடுத்து நிறுத்த வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு மின்வாரிய ஓய்வுவூதியர்அமைப்பினர் அரை நிர்வாண போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Coimbatore, India

மத்திய அரசின் 2022 சட்ட மசோதா திருத்தத்தை தடுத்து நிறுத்த வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு மின்வாரிய ஓய்வுவூதியர்அமைப்பினர் அரை நிர்வாண போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

மத்திய அரசு 2022 சட்ட மசோதா திருத்தத்தை தடுத்து நிறுத்த வேண்டும், ஓய்வூதியர்களுக்கு பென்ஷன் 10 சதவீதம் உயர்த்தி வழங்க வேண்டும், தடுத்து நிறுத்தி வைத்துள்ள குடும்ப ஓய்வூதியத்தை உடனடியாக கொடுக்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை தமிழ்நாடு மின்வாரிய ஓய்வூதியர்கள் சங்கத்தினர் வலியுறுத்தி வருகின்றனர்.

இந்நிலையில், கோவையில் மின்வாரிய ஓய்வூதியர்கள் பவர்ஹவுஸ் பகுதியில் உள்ள மின்வாரிய அலுவலகம் முன்பு அரை நிர்வாண கோலத்தில் போராட்டம் நடத்தினர்.

இதையும் படிங்க :  பொள்ளாச்சிக்கு மினி கோடம்பாக்கம்னு பெயர் வாங்கி தந்தது இந்த பங்களா தானா..!

மேலும், தங்களது கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்களை எழுப்பினர். இதுகுறித்து ஓய்வூதியர் சங்க தலைவர் மீனாட்சி சுந்தரம் கூறியதாவது: “மின்வாரியத்தில் ஓய்வுபெற்றவர்கள் சுமார் 90 ஆயிரம் பேர் உள்ளனர். எங்கள் நியாயமான கோரிக்கைகளுக்காக பல்வேறு இயக்கங்களை நடத்தியுள்ளோம். சமீபத்தில் நிரந்தர பணியாளர்களுக்கு அகவிலைப்படி வழங்கப்பட்டது. ஆனால் ஓய்வூதியர்களுக்கு வழங்கப்படவில்லை.

மின்வாரியத்தில் 58 ஆயிரம் காலி இடங்கள் உள்ளன. அதனை நிரப்ப வேண்டும். எங்கள் கோரிக்கைகளை வலியுறுத்தி நாங்கள் நிர்வாண போராட்டத்தில் ஈடுபட்டுள்ளோம்,” இவ்வாறு அவர் கூறினார்.

இந்த போராட்டத்தில் 50க்கும் மேற்பட்ட ஓய்வூதியர்கள் கலந்துகொண்டனர்.

உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க

Published by:Karthi K
First published:

Tags: Coimbatore, Local News