முகப்பு /செய்தி /கோயம்புத்தூர் / கொலை வழக்கில் ஆயுள் தண்டனை... கோவை சிறையில் மின்சார சைக்கிளைக் கண்டுபிடித்த கைதி...

கொலை வழக்கில் ஆயுள் தண்டனை... கோவை சிறையில் மின்சார சைக்கிளைக் கண்டுபிடித்த கைதி...

சோலார் சைக்கிள்

சோலார் சைக்கிள்

Coimbatore | சோலார் மூலமும், மின் இணைப்பு மூலமும், பெடலிங் செய்வதன் மூலமும் என மூன்று வகைகளில் சார்ஜ் செய்து கொள்ளும் வகையில் இந்த சைக்கிள் வடிவமைக்கப்பட்டுள்ளது.

  • 1-MIN READ
  • Last Updated :
  • Coimbatore, India

கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ள கொலை வழக்கு  கைதி ஒருவர் சூரிய ஒளி சக்தியில் இயங்கும் மின்சார சைக்கிளை வடிவமைத்துள்ளார். சிறைக் காவலர்கள் ரோந்து செல்ல இந்த சைக்கிள் பயன்படுத்தபட்டு வருகின்றது.

ஈரோடு மாவட்டம், கோபிசெட்டிபாளையம் அருகே உள்ள கவிந்தப்பாடியைச் சேர்ந்தவர் யுக ஆதித்தன். ஏரோ நாட்டிக்கல் பொறியியல் படித்தவர். இவர் கடந்த சில  ஆண்டுகளுக்கு முன்பு சேலத்தில் நடந்த  கொலை வழக்கில் கைது செய்யப்பட்டு ஆயுள் தண்டனை பெற்ற்றார்.

கோவை மத்திய சிறையில் கடந்த 6 ஆண்டுகளுக்கு மேலாக இருக்கும் இவர், சிறைவளாகத்தில் பயன்பாடு இல்லாமல் இருந்த மிதிவண்டியை சூரிய ஒளி மூலம் இயங்கும் வகையில் மாற்றியமைத்தார். சைக்கிளிலில் பேட்டரி பொறுத்தப்பட்டு, சைக்கிளின் பின்புறம் சோலார் பேனல் பொருத்தி அதன் மூலம் இயங்கும் வகையில் வடிவமைத்துள்ளார்.

மேலும் பேட்டரியை நேரடியாக சார்ஜ் செய்யும் வகையிலும் வடிவமைக்கப்பட்டு இருப்பதுடன், மிதிவண்டியை பெடலிங் செய்யும் போதும் சார்ஜ் ஆகும் வகையில் இந்த சைக்கிளானது வடிவமைக்கபட்டுள்ளது. சோலார் மூலமும், மின் இணைப்பு மூலமும், பெடலிங் செய்வதன் மூலமும் என மூன்று வகைகளில்  சார்ஜ் செய்து கொள்ளும் வகையில் இந்த சைக்கிள் வடிவமைக்கப்பட்டுள்ளது.

மேலும் படிக்க... டெல்டா மாவட்டங்களில் தூர்வாரும் பணிகளை ஆய்வு செய்யும் முதல்வர் மு.க.ஸ்டாலின்

சுற்று சூழலுக்கு பாதிப்பு இல்லாத வகையில் வடிவமைக்கபட்டுள்ள இ -சைக்கிள் சிறைகாவலர் பயன்பாட்டிற்காக கொண்டு வரப்பட்டுள்ளது. இதே போல மேலும் பல சைக்கிள்களை சிறை கைதிகளை கொண்டு உருவாக்கவும் கோவை சிறை துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.

First published:

Tags: Bicycle, Coimbatore, Prisoner, Solar Iron