மேற்குத்தொடர்ச்சி மலைகளை ஒட்டி அமைந்துள்ள அழகிய மாவட்டம் கோவை.
இயற்கை எழில் சூழந்த இந்த மாவட்டம் தொழிலாளர்களுக்கும் தொழிற்சாலைகளுக்கும் பெயர் பெற்றது. இந்த மாவட்டம் கல்வியிலும் சிறந்த மாவட்டமாக உள்ளது.
மாவட்டத்தின் அனைத்து திசைகளிலும் உலகத்தரம் வாய்ந்த கல்லூரிகள் அமைந்துள்ளன.
கோவை மாவட்டம் மட்டுமல்லாது, அண்டை மாவட்டங்களான ஈரோடு, திருப்பூர், சேலம் உட்பட தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களில் இருந்தும், அண்டை மாநிலங்களான கேரளா ஆந்திரா போன்ற மாநிலங்களில் இருந்தும் மாணவர்கள் இங்கு வந்து படிக்கின்றனர்.
மருத்துவம், பொறியியல், விவசாயம் மற்றும் கலை அறிவியல் உட்பட அனைத்து பாடப்பிரிவுகளையும் வழங்கும் பல்கலைக்கழகங்கள், கல்லூரிகள் இங்கு செயல்பட்டு வருகின்றன. இது மட்டுமல்லாது சினிமாத்துறைக்கு ஏற்ற பல்வேறு படிப்புகளை வழங்கும் கல்லூரிகளும் இங்கு செயல்பட்டு வருகின்றன.
அழகிய சூழல், குளுமையான காலநிலை, அன்பான மக்கள் என்று கோவை மாவட்டம் அமைதியான மாவட்டமாக விளங்குவதால் இங்கு வந்து படிக்க மாணவர்கள் அதிக ஆர்வம் காட்டி வருகின்றனர்.
வரும் காலங்களில் இந்தியாவின் முன்னோடி கல்வி நகரமாக கோவை மாறும் என்கின்றனர் கல்வியாளர்கள்.
செய்தியாளர் : சௌந்தர்மோகன்
உங்கள் நகரத்திலிருந்து(Coimbatore)
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.