பல ஆண்டுகளாக அரசுப் பணிக்கு போராடிக்கொண்டிருப்பதாகவும், முறையாக படித்த தங்களுக்கு பணி வழங்க வேண்டும் என்றும் வலியுறுத்தி தமிழ்நாடு அனைத்து மயக்கவியல் தொழில்நுட்புநர் நல சங்கத்தினர் கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலத்திற்கு வந்து மனு ஒன்றை அளித்தனர்.
மேலும், அரசின் விதிமுறைப்படி அரசு மருத்துவக்கல்லூரியில் பயின்ற தங்களுக்கு அரசு வேலை வழங்காமல் சம்மந்தமே இல்லாமல் மற்றவர்களுக்கு வேலை வழங்கியுள்ளதாக தெரிவித்திருந்தனர். மேலும், கொரோனா காலத்தில் மக்களுக்கு சேவை செய்த தங்களுக்கு அரசு பணி வழங்க வேண்டும் என்றும், இதற்காக சுமார் 20 ஆண்டுகளாக போராடி வருவதாகவும் அவர்கள் தெரிவித்தனர்.
இதுகுறித்து அவர்கள் கூறியதாவது :
தமிழ்நாடு அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் மயக்கம் தொழில்நுட்புனர் என்ற படிப்பை பலரும் படித்து வருகின்றனர். 2005 - 2006 ஆம் ஆண்டு தமிழக அரசால் தமிழக அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகளில் தொடங்கப்பட்டது. எனவே இந்த படிப்பை முடித்து 17 வருடங்கள் மற்றும் 10 வருடங்களுக்கு மேலாகியும் பலருக்கும் பணி வாய்ப்பு இன்னும் வழங்கப்படவில்லை.
மேலும் கொரோனா காலகட்டத்தில் தமிழக அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் உள்ள அறுவை அரங்கில் இத்துறையைச் சார்ந்த பலரும் பணியாற்றியுள்ளனர். மேலும் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்திலும் பதிவு செய்துள்ளார்கள். தமிழக அரசும், சுகாதாரத் துறையும் கொரோனா காலகட்டத்தில் பணியாற்றிய மயக்கவியல் தொழில்நுட்பர்களுக்கு அரசு பணியில் முன்னுரிமை வழங்க வேண்டும். தற்போது ஒப்பந்த அடிப்படையில் பணியாற்றி வருபவர்களை நிரந்தரம் செய்ய வேண்டும்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.
தங்களது கோரிக்கையை அரசு இனியும் பரிசீலனை செய்யாவிட்டால் தமிழகம் முழுவதும் உள்ள மயக்கம் தொழில்நுட்ப நிபுணர்களை திரட்டி மாநிலம் தழுவிய போராட்டத்தில் ஈடுபட உள்ளதாகவும் அவர்கள் தெரிவித்தனர்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Coimbatore, Local News, Medical colleges