Home /coimbatore /

குப்பை மேட்டை நந்தவனமாக மாற்றிய கோவை மக்கள்.. இது மியாவாக்கி பூங்கா..

குப்பை மேட்டை நந்தவனமாக மாற்றிய கோவை மக்கள்.. இது மியாவாக்கி பூங்கா..

குப்பை

குப்பை மேட்டை நந்தவனமாக மாற்றிய கோவை மக்கள்..

Coimbatore District News | கோவை பீளமேடு பகுதியை அடுத்து அமைந்துள்ளது பாலன் நகர். இந்த நகரை சுற்றிலும் நூற்றுக்கு மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர். இந்த பகுதியில் 50 சென்ட் பரப்பளவில் ரிசர்வ் சைட் உள்ளது. குப்பை கொட்டும் பகுதியாக இதனை அப்பகுதி மக்கள் நந்தவனமாக மாற்றியுள்ளனர்,

மேலும் படிக்கவும் ...
  • News18 Tamil
  • 2 minute read
  • Last Updated :
  • Coimbatore, India
கோவையில் குப்பை கொட்டும் பகுதியாக இருந்த ரிசர்வ் சைட்டை மீட்டு அங்கு அடர் வனம் மற்றும் பூங்கா அமைத்து நந்தவனம் போல் மாற்றியுள்ளனர் கோவை மக்கள்.

கோவை பீளமேடு பகுதியை அடுத்து அமைந்துள்ளது பாலன் நகர். இந்த நகரை சுற்றிலும் நூற்றுக்கு மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றன. இந்த பகுதியில் 50 சென்ட் பரப்பளவில் ரிசர்வ் சைட் உள்ளது.

பொதுவாக ஒவ்வொரு பகுதிகளுக்கும் ஒதுக்கப்பட்டிருக்கும் ரிசர்வ் சைட்டுகள் அந்த பகுதி மக்களின் பொது பயன்பாட்டிற்காக ஒதுக்கப்பட வேண்டும். அந்த வகையில் கோவையில் ஒவ்வொரு பகுதியிலும் இவ்வகையான ரிசர்வ் சைட்டுகள் உள்ளன.

ஒரு இடம் காலியாக இருந்தாலே அங்கு நம் மக்கள் குப்பை கொட்டவே பயன்படுத்துவார்கள். அந்த வகையில் கோவை பாலன் நகர் பகுதியில் உள்ள ரிசர்வ் சைட் முறையான பராமரிப்பு இன்றி, குப்பை கொட்டும் இடமாகவும், கட்டிடக் கழிவுகளை கொட்டும் இடமாகவும் இருந்தது. இதனால் சுற்றுவட்டார பகுதியில் உள்ள வீடுகளுக்குள் பாம்பு உள்ளிட்ட விஷ பூச்சிகள் படையெடுத்து அச்சுறுத்தலை ஏற்படுத்தின.

மியாவாக்கி பூங்கா..


275 வகை தாவரங்கள்:

இதனிடையே சிறுதுளி என்ற தன்னார்வ அமைப்புடன் இணைந்து ரிசர்வ் சைட்டை மீட்ட இப்பகுதி மக்கள், அங்கு பூங்கா அமைத்துள்ளனர். இந்த பூங்காவில் மரக்கன்றுகள், பூச்செடிகள், பழ வகைகள் மற்றும் காய்கறி வகைகள் என 275 வகை தாவரங்களை மியாவாக்கி முறையில் நடவு செய்துள்ளனர் பொதுமக்கள்.

ஐந்தினை வகை மரம், ராசி , நட்சத்திர மரக்கன்றுகள், சப்போட்டா, கத்தரி, வெண்டை உள்ளிட்ட காய்கறி செடிகள், அரிய வகை பூச்செடிகள் இங்கு உள்ளன. மேலும், பொதுமக்கள் நடைபயிற்சி மேற்கொள்ளவும், அமர்ந்து படிக்கவும் பிரத்யேகமாக இடங்கள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.

மியாவாக்கி பூங்கா..


தினமும் தன்னார்வலர்கள் இணைந்து இந்த பூங்காவை பராமரிக்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இதனிடையே பூங்காவிற்கு மின் வசதி வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இதுகுறித்து தன்னார்வலர் தேன்மொழி கூறுகையில்,  "ரிசர்வ் சைட்டுகளில் மியாவாக்கி முறையில் மரக்கன்றுகள் நடவு செய்து பராமரிக்கப்படாமல் இருந்தால் அது பொதுமக்களுக்கு பயனளிக்காது. இதனால் தான் மியாவாக்கியுடன் கூடிய பூங்கா அமைத்துள்ளோம்.

உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க

இந்த பூங்காவை அமைக்க சிறுதுளி அமைப்பு எங்களுக்கு உதவியது. அதோடு பொதுமக்களிடம் இருந்தும் நிதியை திரட்டி சுமார் ரூ.15 லட்சம் செலவில் பூங்கா உருவாக்கப்பட்டுள்ளது.
கோவையின் 'மாடல் பூங்கா' போன்று இந்த ரிசர்வ் சைட் பூங்கா மாறியுள்ளது. அனைத்து பகுதிகளில் உள்ள ரிசர்வ் சைட்டுகளையும் இது போன்ற மியாவாக்கி பூங்காக்களாக மாற்ற தயாராக உள்ளோம்." என்றார் தேன்மொழி.
Published by:Arun
First published:

Tags: Coimbatore, Local News

அடுத்த செய்தி