முகப்பு /கோயம்புத்தூர் /

உயிரை கையில் பிடித்தபடி பயணம்.. : கோவையில் குண்டு குழியுமான சாலையால் பொதுமக்கள் அவதி 

உயிரை கையில் பிடித்தபடி பயணம்.. : கோவையில் குண்டு குழியுமான சாலையால் பொதுமக்கள் அவதி 

X
பள்ளமான

பள்ளமான சாலை

Coimbatore | கோவையில் திருச்சி சாலை, அவினாசி சாலையில் இணைக்கும் முக்கிய சாலை பள்ளமாக இருப்பதால் வாகன ஓட்டிகள் கடும் அவதியடைந்துவருகின்றனர்.

  • News18 Tamil
  • 1-MIN READ
  • Last Updated :
  • Coimbatore, India

கோவையில் திருச்சி சாலை மற்றும் அவினாசி சாலையை இணைக்கும் பிரதான சாலையானது அபாயமான குண்டும் குழியும் நிறைந்த சாலையாக இருப்பதால் அவ்வழியாக பயணம் செய்யும் வாகன ஓட்டிகள் உயிரை கையில் பிடித்தபடி வாகனங்களை இயக்கி வருகின்றனர்.

கோவை மாநகரில் சாலை பிரச்சனை தலைவிரித்தாடி வருகிறது. பாதாள சாக்கடை திட்டம் மற்றும் 24 மணிநேர குடி நீர் திட்டப்பணிகளுக்காக மாநகரில் உள்ள அனைத்து சாலைகளும் தோண்டப்பட்டன. அவ்வாறு தோண்டப்பட்ட சாலைகள் மீண்டும் அமைக்கப்படாமல் கிடப்பில் போடப்பட்டன. இது தவிர பழைய சாலைகள் பேச் ஒர்க் செய்யப்படாமல் இருப்பதால் சாலைகள் குண்டும் குழியுமாக மாறியுள்ளன.

இதனால் கோவை மாநகரில் வாகனங்களை இயக்குவோர் கடும் அவதிகளை சந்தித்து வருகின்றனர். இதனிடையே கோவையில் சாலைகளை சீரமைத்திட 200 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் கே.என்.நேரு தெரிவித்தார். சட்டமன்றத்தில் அமைச்சர் அறிவித்த ஒரு சில தினங்களில் மாநகராட்சி நிர்வாகம் குண்டும் குழியுமாக இருந்த சாலைகளில் சிலவற்றில் மட்டும் பேச் ஒர்க் செய்தது. தரமின்றி செய்யப்பட்ட சாலை பணிகளால், பணி முடிந்த ஒரு சில வாரங்களிலேயே சாலைகளில் பள்ளம் ஏற்பட்டது.

இதனால் மக்கள் கடுமையாக அவதியடைந்து வருகின்றனர். இதனிடையே கோவையில் உள்ள திருச்சி சாலை மற்றும் அவினாசி சாலையை இணைக்கும் பெர்க்ஸ் பள்ளி சாலையில் ராட்சத பள்ளங்கள் ஏற்பட்டுள்ளன. தினமும் ஆயிரக்கணக்கான வாகனங்கள் சென்று வரும் இந்த சாலை முற்றிலுமாக சிதிலடமைந்த நிலையில் காணப்படுகிறது.

திருச்சி சாலையில் இருந்து பெர்க்ஸ் சாலை வழியாகச் செல்லும் வாகன ஓட்டிகள் குண்டும் குழியுமான சாலையில் சிக்கி தத்தளித்தபடி சென்று வருகின்றனர். இரு சக்கர வாகனங்களில் செல்லும் பெண்கள் இந்த ராட்சத பள்ளங்களில் சிக்கி அவ்வப்போது கீழே விழுந்து காயமடைந்து வருகின்றனர்.

இரண்டு பள்ளிகள், பெட்ரோல் பங்கு, அடுக்குமாடிக்குடியிருப்புகள் மற்றும் த்னி நபர் குடியிருப்புகள் உள்ள இந்த சாலையை மாநகராட்சி நிர்வாகம் சரி செய்யாமல் இருப்பது அவ்வழியாகச் செல்லும் வாகன ஓட்டிகளுக்கு கடும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.

சிலிர்ப்பூட்டும் சின்னக் கல்லாறு அருவி... ஒரு என்ஜாய் ட்ரிப் போகலாம்!

பெரிய விபத்துகள் நடைபெறும் முன்னதாக இந்த சாலையை சரி செய்து, தரமான தார் சாலை அமைக்க வேண்டும் என்பதே கோவை மக்களின் கோரிக்கையாக உள்ளது.

First published:

Tags: Coimbatore, Local News