ஹோம் /கோயம்புத்தூர் /

மேட்டுப்பாளையத்தில் நாளை முதல் 3 நாட்களுக்கு குடிநீர் விநியோகம் ரத்து

மேட்டுப்பாளையத்தில் நாளை முதல் 3 நாட்களுக்கு குடிநீர் விநியோகம் ரத்து

குடிநீர் நிறுத்தம்

குடிநீர் நிறுத்தம்

Mettupalayam Drinking water | கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் நகராட்சியில் 3 நாட்களுக்கு குடிநீர் விநியோகம் நிறுத்தப்படும் என்று நகராட்சி நிர்வாகம் அறிவித்துள்ளது.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Coimbatore, India

கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் நகரில், திருப்பூர் நான்காவது குடிநீர் திட்ட குழாய், பதிக்கும் பணிகள் தற்போது நடந்து வருகின்றன. இந்த பணிகளல் புதிய குடிநீர் திட்ட பம்பிங் மெயின் குழாய் இடமாற்றம் செய்யப்படுகிறது. இதற்கான ஆயத்தப் பணிகள் துவங்கியுள்ளன.

இதனால், வரும் 29,30 மற்றும் 31 ஆகிய தேதிகளில் குடிநீர் விநியோகம் இருக்காது. இதையொட்டி மேட்டுப்பாளையத்தில் உள்ள அனைத்து வார்டு பகுதிகளுக்கும் அவசர தேவைகளுக்ககா லாரிகளில் அந்தந்த பகுதிகளுக்கு நகராட்சி உறுப்பினர்களால் குடிநீர் விநியோகம் செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

லாரிகள் செல்ல முடியாத இடங்களுக்கும் பொது மக்கள் தாங்கள் முன் வந்து தங்களுடைய வாகனங்கள் மற்றும் இதர வாகனங்களில் பயன்படுத்தியும் குடிநீர் பிடித்து செல்லுமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. இந்த பணிகளுக்காக நகராட்சி நிர்வாகத்துக்கு ஒத்துழைப்பு அளித்து பொது மக்கள் நல்கிட வேண்டும் என்றும் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.

Must Read : காந்தளூர் அருவி முதல் அமராவதி அணை வரை.. உடுமலையை சுற்றி மட்டும் இத்தனை சுற்றுலா தலங்களா?

3 நாட்களுக்கு குடிநீர் நிறுத்தம் செய்யப்படுவதால், பொது மக்கள் குடிநீர் வரும் பொழுது சேமித்து வைப்பதுடன் மிகவும் சிக்கனமாகவும் தண்ணீரை பயன்படுத்த வேண்டும் என்று நகராட்சி சார்பிலும், தெரிவிக்கப்பட்டுள்ளது.

உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க

பொது மக்கள் கட்டயாம் குடிநீரை சேமித்து வைத்து பயன்படுத்த வேண்டும் என்று நகர மன்ற தலைவர் மெஹரீபா பர்வீன் மற்றும் நகராட்சி ஆணையாளர் வினோத் ஆகியோர் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

Published by:Suresh V
First published:

Tags: Coimbatore, Drinking water, Local News, Water