Home /coimbatore /

சாக்கடைக்கு அருகில் டெங்கு விழிப்புணர்வு வாசகம்.. கோவை அரசு மருத்துவமனை நோய் பரப்பும் கூடாரமா? கண்டுகொள்ளுமா மாநகராட்சி?

சாக்கடைக்கு அருகில் டெங்கு விழிப்புணர்வு வாசகம்.. கோவை அரசு மருத்துவமனை நோய் பரப்பும் கூடாரமா? கண்டுகொள்ளுமா மாநகராட்சி?

கோவை.

கோவை.

Coimbatore District: கோவை மாநகரில் இப்படியான சுகாதார சீர்கேடு ஏற்படும் இடத்தில் டெங்கு ஒழிப்பு விழிப்புணர்வு வாசகங்கள் அடங்கிய பதாகை வைத்திருப்பது வேடிக்கையான விஷயமாக உள்ளது.

    கோவை அரசு மருத்துவமனைக்கு நாள்தோறும் ஆயிரக்கணக்கான உள்நோயாளிகளும், வெளி நோயாளிகளும் வந்து செல்கின்றனர். மாவட்டத்தின் தலைமை மருத்துவமனையான இங்கு கோவை மாவட்டம் மட்டுமல்லாது அண்டை மாவட்டங்களில் இருந்தும், கேரள மாநிலத்தில் இருந்தும் நோயாளிகள் சிகிச்சைக்காக வருகின்றனர்.

    இப்படிப்பட்ட மருத்துவமனையின் வெளிப்புறத்தில் சாக்கடை கழிவுகள் தேங்கி உச்சபட்ச சுகாதார சீர்கேட்டிற்கு வழி வகுத்துள்ளது கோவை மாநகராட்சி நிர்வாகம். அரசு மருத்துவமனை முன்பு உள்ள சாக்கடையில் முறையான வடிகால் அமைக்கப்படாத காரணத்தால் நீண்ட நாட்களாக கழிவு நீர் தேங்கி கொசு உற்பத்தி கூடாரமாக மாறியுள்ளது.

    மருத்துவமனைக்கு எதிரே இருந்த கழிவறையும் மூடப்பட்டுள்ளதால், சாக்கடையிலேயே சிறுநீர் கழிக்கும் அவல நிலையும் ஏற்பட்டுள்ளது. இதனால் இப்பகுதியை கடந்து செல்பவர்களு, மருத்துவமனைக்கு வருபவர்களும் மூக்கைபிடித்துக் கொண்டு கடந்து செல்ல வேண்டிய சூழல் உள்ளது.

    இப்படியான சுகாதார சீர்கேடு ஏற்படும் இடத்தில் டெங்கு ஒழிப்பு விழிப்புணர்வு வாசகங்கள் அடங்கிய பதாகை வைத்திருப்பது வேடிக்கையான விஷயமாக உள்ளது.

    செய்தியாளர் : சௌந்தர்மோகன்
    Published by:Arun
    First published:

    Tags: Coimbatore

    அடுத்த செய்தி