கோயம்புத்தூர் மாவட்டத்தை சேர்ந்த கல்வி ஆலோசகர் கூறிய நீட் தேர்வு குறித்தான தகவல்களை பார்க்கலாம்.
இந்தியாவில் மருத்துவ படிப்புக்கு கட்டாயமாக்கப்பட்டுள்ள நீட் தகுத்தேர்வு எழுதாமலேயே வெளிநாடுகளில் குறைந்த செலவில் மருத்துவம் படிக்கலாம் என்று சில தனியார் நிறுவனங்கள் நாடு முழுக்க விளம்பரம் செய்து கொண்டிருக்கின்றனர். ஆனால், அப்படி செய்தால் இந்தியாவில் உங்களால் மருத்துவம் பார்க்கவே முடியாது என்கிறார் கோயம்புத்தூரை சேர்ந்த கல்வி ஆலோசகர் சுரேஷ்பாபு.
இதுகுறித்து அவர் கூறியதாவது, “நீட் தேர்வு வருவதற்கு முன் யார் வேண்டுமானாலும் வெளி நாடுகளுக்கு சென்று மருத்துவம் படிக்கலாம் என்று தான் இருந்தது. ஆங்கிலம், இயற்பியல், வேதியியல் மாற்றும் உயிரியல் படிப்பும், ஆங்கிலத்திலும் பொது பிரிவை சேர்ந்தவர்கள் 50 சதவீத மதிப்பெண்களும், எஸ்சி, எஸ்டி மாற்றும் ஓபிசி மாணவர்கள் 40 சதவீத மதிப்பெண்களும் பெற்றாலே அவர் வெளிநாட்டில் மருத்துவம் படிக்க தகுதியானவராக இருந்தது.
நீட் தேர்வு அறிமுகமானதன் பின்பு, இந்தியாவில் நீட் தேர்வு எழுதி விட்டு தான் வெளிநாடுகளில் கூட மருத்துவம் படிக்க வேண்டும் என்கிற சட்டம்- அமலில் உள்ளது. இந்த சட்டம் பல மாணவர்களுக்கும் தெரியவில்லை. நீட் தேர்வு எழுதாமலேயே மருத்துவர் ஆகலாம் என்று கூறும் தனியார் நிறுவனங்கள் இறுதியில் விலகிக் கொள்வார்கள். இதனால் பணமும், காலமும் தான் விரயமாகிறது.
நீட் தேர்வில் தேர்ச்சி பெற்றிருந்தால் மட்டுமே இந்திய மருத்துவ சங்கம் சம்மந்தப்பட்டவருக்கு மருத்துவருக்கான உரிமத்தை வழங்கும். நீட் தேர்வு வெளிநாடுகளில் மருத்துவம் படித்துவிட்டு வந்தால் இங்கு மருத்துவருக்கான உரிமம் வழங்கப்படமாட்டாது. உங்கள் படிப்பு என்பது காகிதத்தில் மட்டும் தான் இருக்கும். எனவே மாணவர்கள் இதில் கவனமாக இருக்க வேண்டும்.
இந்திய மருத்துவ சங்கம் தற்போது பல்வேறு விதிமுறைகள் வகுத்துள்ளது. அதன்படி நீங்கள் செல்லும் கல்லூரி குறைந்தது 54 மாதங்கள் மருத்துவம் கற்றுக் கொடுத்திருக்க வேண்டும். அதே கல்லூரியில் நீங்கள் ஒரு ஆண்டு 'இண்டர்ன்ஷிப்' எனப்படும் பயிற்சி பெற்றிருக்க வேண்டும். கல்லூரியில் கட்டாயம் ஆங்கிலத்தில் பாடம் எடுத்திருக்க வேண்டும். எந்த நாட்டில் படித்தீர்களோ அந்த நாட்டில் நீங்கள் மருத்துவம் செய்வதற்கான உரிமத்தை வைத்திருக்க வேண்டும். வை அனைத்தும் முழுமை பெற்றிருந்தால் மட்டுமே உங்களால் இந்தியாவில் மருத்துவர் ஆக முடியும்,” இவ்வாறு சுரேஷ் பாபு கூறினார்.
உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க
கல்லூரிகள் துவங்க உள்ள நேரத்தில் வெளி நாடுகளுக்கு சென்று படிக்க விரும்பும் மாணவர்கள் நல்ல நிறுவனத்தை அல்லது நம்பிக்கையானவர்களிடம் சென்று படிப்பு குறித்துக் கேட்டு, முழுமையாக விசாரித்த பின்னரே செல்ல வேண்டும். காலாம் பொன் போன்றது என்பதை உணர்ந்து நேரத்தையும், பணத்தையும், விரயம் செய்யாமல் கவனமா இருங்க ஸ்டூடண்ட்ஸ்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Coimbatore, Education, Local News