ஹோம் /கோயம்புத்தூர் /

கோவை : மக்களை தேடி மருத்துவம் திட்டத்தில் பணியாற்ற விருப்பமுள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.! - தகுதிகள், சம்பளம் - விவரம்..!!

கோவை : மக்களை தேடி மருத்துவம் திட்டத்தில் பணியாற்ற விருப்பமுள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.! - தகுதிகள், சம்பளம் - விவரம்..!!

கோவை

கோவை

Coimbatore Makkalai Thedi Maruthuvam | கோவை மாவட்டத்தில் மக்களைத் தேடி மருத்துவம் திட்டத்தில் காலியாக உள்ள இயன்முறை மருத்துவா் பணியிடம் தற்காலிக ஒப்பந்த அடிப்படையில் ரூ.13 ஆயிரம் தொகுப்பூதியத்தில் நிரப்பப்படவுள்ளது.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Coimbatore | Coimbatore

கோவை மாவட்டத்தில் மக்களை தேடி மருத்துவ திட்டத்தில், விருப்பம் உள்ளவர்கள் ஆன்லைன் வாயிலாகவும், நேரடியாகவும் தபால் மூலமும் விண்ணப்பிக்கலாம் என்று கோவை மாவட்ட ஆட்சியர் ஜி. எஸ். சமீரன் தெரிவித்துள்ளார்.

இது தொடா்பாக அவா் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: கோவை மாவட்டத்தில் மக்களைத் தேடி மருத்துவம் திட்டத்தில் காலியாக உள்ள இயன்முறை மருத்துவா் பணியிடம் தற்காலிக ஒப்பந்த அடிப்படையில் ரூ.13 ஆயிரம் தொகுப்பூதியத்தில் நிரப்பப்படவுள்ளது.

கல்வி, வயது தகுதி:

விண்ணப்பதாரா்கள் அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தில் இயன்முறை மருத்துவப் பிரிவில் இளநிலை பட்டப் படிப்பு தோ்ச்சிபெற்றிருக்க வேண்டும். குறைந்தபட்சம் ஓராண்டு அனுபவம் பெற்றிருத்தல் வேண்டும். விண்ணப்பதாரா்கள் 21 முதல்

35 வயதுக்குள் இருக்க வேண்டும்.

மேலும் படிக்க:  கோவையில் மாணவர்களை தேடிச்செல்கிறது நடமாடும் நூலகம்.. பொதுமக்களும் படிக்கலாம்.. எங்கெல்லாம் செல்கிறது தெரியுமா?

இதற்கான விண்ணப்பத்தை ஆன்லைன் வழியாக விண்ணப்பிக்க வேண்டும் இணையதளத்தில் இருந்து பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். தகுதியான நபா்கள் விண்ணப்பத்துடன் கல்விச் சான்றிதழ்களை இணைத்துத் அக்டோபா் 3ஆம் தேதி மாலை 5 மணிக்குள் ரேஸ்கோர்ஸ் பகுதியிலுள்ள சுகாதாரத் துறை துணை இயக்குநா் அலுவலகத்தில் நேரடியாகவோ அல்லது அஞ்சல் மூலமாகவோ அளிக்கலாம்.

நேர்முக தேர்வு:

இதற்கான நோ்முகத் தோ்வு அக்டோபா் 14ஆம் தேதி காலை 10 மணிக்கு சுகாதாரத் துறை துணை இயக்குநர் அலுவலகத்தில் நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் படிக்க:  வேளாண் பொருட்கள் ஏற்றுமதி - கோவையில் 5 நாட்கள் பயிற்சி முகாம்

உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க

தற்போது மக்களை தேடி மருத்துவ திட்டத்தில் மக்களுக்கு அதிக நன்மைகள் கிடைப்பதாகவும் வீடு தேடி வருவதாக மக்களுக்கு நல்ல முறையில் சிகிச்சை கிடைப்பதாகவும் பொது மக்களும் சிலர் ஆதரவு தெரிவித்துள்ளதால்,  மருத்துவர்களின் தேவை அதிகரித்துள்ளது.

Published by:Arun
First published:

Tags: Coimbatore, Government jobs, Local News