முகப்பு /கோயம்புத்தூர் /

பெண்களுக்கு விளையாட்டு கோட்டாவில் சீட்.. கோவையில் முக்கிய அறிவிப்பை வெளியிட்ட கல்லூரி

பெண்களுக்கு விளையாட்டு கோட்டாவில் சீட்.. கோவையில் முக்கிய அறிவிப்பை வெளியிட்ட கல்லூரி

மாதிரி படம்

மாதிரி படம்

Coimbatore News : கோவையில் உள்ள பிரபல கல்லூரி, பெண்கள் விளையாட்டு கோட்டாவின் கீழ் கல்லூரியில் சேர்ந்து படிக்கலாம் என்று அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

  • Last Updated :
  • Coimbatore, India

கோவையில் உள்ள பி.எஸ்.ஜி.ஆர் கிருஷ்ணம்மாள் மகளிர் கல்லூரியில் விளையாட்டு இட ஒதுக்கீட்டின்கீழ் சேர்ந்து படிக்க, சிறந்த விளையாட்டு வீராங்கனைகளை தேர்வு செய்யும் தேர்வு நடைபெற இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

கோவை பீளமேடு அருகே பி.எஸ்.ஜி.ஆர் கிருஷ்ணம்மாள் மகளிர் கல்லூரி செயல்பட்டு வருகிறது. இந்த கல்லூரியில் ஆண்டுதோறும் சிறந்த விளையாட்டு வீராங்கணைகளுக்கு விளையாட்டு கோட்டாவின்கீழ் சீட் வழங்கப்பட்டு வருகிறது. இதனிடையே வரும் 2023-24ம் கல்வியாண்டுக்கு, விளையாட்டு இட ஒதுக்கீட்டின் கீழ் மாணவிகள் சேர்க்கைக்காக சிறந்த விளையாட்டு வீராங்கனைகளை தேர்வு செய்யும் திறனாய்வுத்தேர்வு ஏப்ரல் மாதம் 11ம் தேதி நடைபெறுகிறது.

உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க

இதில் நீளம் தாண்டுதல், உயரம் தாண்டுதல், தொடர் ஓட்டம் உள்ளிட்ட தடகளப்போட்டிகள் மற்றும் கூடைப்பந்து, இறகுப்பந்து, செஸ் உள்ளிட்ட விளையாட்டு வீராங்கணைகள் பங்கேற்கலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதில் தேர்வு செய்யப்படும் மாணவிகள் கல்லூரியில் விளையாட்டு இட ஒதுக்கீட்டீன் கீழ் சேர்ந்து படிக்கலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுளது. இதுகுறித்து தகவல்களுக்கு 9566442202 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம் என்று கல்லூரி நிர்வாகம் அறிவித்துள்ளது.

First published:

Tags: Coimbatore, Local News