கோவை- சேலம் இடையே இயக்கப்படும் ரயில்கள் இன்று முதல் 3 நாள் ரத்து செய்யப்படும் என்று ரயில்வே நிர்வாகம் சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது. இதில் எந்தெந்த ரயில்கள் இயக்கப்படாது என்றுஅறிந்து கொள்ளலாம் வாங்க.
ரயில் வே நிர்வாகம் சார்பில் ரயில் வழித்தடங்களில் பராமரிப்பு பணிகள் செய்யப்படுகிறது. அப்போது ரயில் வே தடங்களில் உள்ள தண்டவாளங்களில் உள்ள விரிசல், பழுதடைந்த தண்டவாளங்கள், மின் கம்பங்கள், மின் ஜல்லி கற்கள், சிக்னல்கள், கான்கிரீட் தூண்கள் , மேம்பாலங்கள் உள்ளிட்டவைகளை கண்டறிந்து தடுப்பு பணிகள் செய்யப்படுகிறது.
மேலும், இவைகள் சரி செய்யப்படுதவால், ரயில்களை விரைவாகவும் சீராகவும் இயக்க முடியும். மேலும் வழித்தடங்களை நிர்வாகிக்கவும் ஏதுவாக இருக்கும் என்றும் ரயில்வே நிர்வாகம் கூறிவருகிறது.
இந்நிலையில் கோவையில் இருந்து சேலம் செல்லும் வழியில் உள்ள தண்டவாளங்களில் இத்தகையை பராமரப்பு பணிகள் நடக்கிறது.
மேலும், வழித்தடத்தில் உள்ள புற்கள், முற் செடிகள், புதர்களும் அகற்றப்பட உள்ளது. இதனால் சீராக மின் விநியோகம், சிக்னல்கள், தொடர்பு வசதிகளை மேம்படுத்த முடியும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், கோவை - சேலம் வழித்தடத்தில் இயக்கப்படும் மெமு ரயில் சேவை செப்டம்பா் 19 முதல் 21
ஆம் தேதி வரை 3 நாள்களுக்கு ஈரோடு - சேலம் இடையே பகுதியாக ரத்து செய்யப்படுகிறது.
உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க
இது தொடா்பாக, சேலம் ரயில்வே கோ ட்ட நிா் கம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: சேலம், ஈரோடு பகுதிகளில் ரயில் பாதை யில் பொறியியல் பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளப்படுவதால், கோவை ரயில் நிலையத்தில் இருந்து தினமும் காலை 9.05 மணிக்கு புறப்படும் கோவை - சேலம் மெமு ரயில் (எண்: 06802) செப்டம்பா் 19, 20,21 ஆகிய 3 நாள்கள் கோவை - ஈரோடு இடையே மட்டும் இயக்கப்படும். ஈரோடு- சேலம் இடையே இயக்கப்படாது.
இதையும் வாசிக்க: அதிகரித்து வரும் கோவைக்கான ரயில்வே துறை சார்ந்த தேவைகள் என்னென்ன?
அதேபோல, சேலம் ரயில் நிலையத்தில் இருந்து தினமும் பிற்பகல் 1.40 மணிக்குப் புறப்படும் சேலம் - கோவை மெமு ரயில் (எண்: 06803) செப்டம்பா் 19, 20,21 ஆகிய 3 நாள்கள் ஈரோடு - கோவை இடையே மட்டும் இயக்கப்படும். சேலம் - ஈரோடு இடையே இயக்கப்படாது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Coimbatore, Southern railway, Train