கோவை மாவட்டமானது தினசரி மது விற்பனையில் மாநில அளவில் 3வது இடம் பிடித்துள்ளது. இதனிடையே பல்வேறு சட்டவிரோத செயல்களுக்கு போதை பொருட்களே காரணம் என்றும், உடனடியாக மது விலக்கை அமல்படுத்த வேண்டும் என்றும் கோரிக்கை எழுந்துள்ளது.
தமிழகத்தில் மதுபான விற்பனையானது நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணம் உள்ளது. மாநில அளவில் பல்வேறு மாவட்டங்களில் மதுபான விற்பனை குறித்து ஆய்வு நடத்தப்பட்டது. ஆய்வின் முடிவுகளில், காஞ்சிபுரம் மாவட்ட அளவில் தினசரி 9 கோடியே 40 லட்சம் ரூபாய்க்கு மதுபான விற்பனையாகி வருகிறது. இதற்கு அடுத்த இடத்தில் சென்னையில் ரூ.9 கோடியே 70 லட்சம் ரூபாய்க்கு தினசரி மது விற்பனையாகிறது.
இந்நிலையில், 3வது இடத்தில் கோவை மாவட்டம் உள்ளது. கோவை மாவட்டத்தில் 305 மதுபான கடைகளின் மூலமாக 8.61 கோடி ரூபாய்க்கு தினசரி வருவாய் கிடைப்பதாக தெரியவந்துள்ளது. அடுத்தடுத்த இடங்களில், திருவள்ளூர், திருப்பூர், சேலம் உள்ளிட்ட மாவட்டங்கள் இருக்கிறது. வழக்கமாக கடந்த சில ஆண்டுகளாக திருப்பூர் மாவட்டம் மது விற்பனையில் 2 அல்லது 3-வது இடத்தில் நீடித்து வந்தது. பனியன் நிறுவனங்களின் உற்பத்தி பாதிப்பு, தொழிலாளர்கள் வேலை இழப்பு காரணமாக மதுபான விற்பனை குறைந்து வருவது தெரியவந்துள்ளது. திருப்பூரில் தினசரி மதுபான விற்பனை 6.21 கோடி ரூபாயாக இருக்கிறது.
உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க
கோவையில் இளைஞர்கள் மதுபானங்களையும் போதை வஸ்துக்களையும் பயன்படுத்துவது தொடர்ச்சியாக அதிகரித்து வருகிறது. இதனால் ஆங்காங்கே குற்றச்சம்பவங்களும், அடிதடி சம்பவங்களும் அரங்கேறி வருகின்றன. குற்றங்கள் அதிகரிப்பதும், மதுபான விற்பனை அதிகரிப்பதுவும் ஒன்றுக்கொன்று தொடர்புடையது என்று கூறும் கோவை மக்கள் தமிழகத்தில் மதுவிலக்கை அமல்படுத்த வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளனர்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Coimbatore, Local News