முகப்பு /கோயம்புத்தூர் /

கோவையில் நடப்பு ஆண்டில் எத்தனை கோடி கல்விக்கடன் வழங்க இலக்கு தெரியுமா?

கோவையில் நடப்பு ஆண்டில் எத்தனை கோடி கல்விக்கடன் வழங்க இலக்கு தெரியுமா?

X
கல்விக்கடன்

கல்விக்கடன்

Coimbatore News | கோவை மாவட்டத்தில் நடப்பாண்டில் நிர்ணயம் செய்யப்பட்டுள்ள கல்வி கடன் இலக்கு குறித்து வெளியிடப்பட்டுள்ளது.

  • News18 Tamil
  • 1-MIN READ
  • Last Updated :
  • Coimbatore, India

ஏழை மாணவர்கள் பலரும் தங்களது உயர் கல்விக்காக வங்கிகளை நாடி கல்விக்கடன் பெற்று அதன் மூலமாக தங்களது கல்வியை தொடர்கின்றனர். இப்படி கல்விக்கடன் பெறும் மாணவர்கள் தாங்கள் படித்து முடித்து பணியில் இணைந்த பின்னர் தாங்கள் வாங்கிய கடனை திரும்ப செலுத்த வேண்டும். இதனிடையே கோவையில் மாணவர்களுக்கான கல்விக்கடன் வழங்கும் சிறப்பு முகாம் நடைபெற்றது.

இந்த முகாமை கோவை மாவட்ட ஆட்சியர் கிராந்திகுமார் பாடி துவக்கி வைத்தார். இந்த சிறப்பு கல்விக் கடன் முகாமில் கனரா, இந்தியன் ஓவர்சீஸ், பேங்க் ஆப் பரோடா உள்ளிட்ட பல்வேறு வங்கிகள் கலந்து கொண்டன. கோவை மாவட்டத்தை சேர்ந்த 200க்கும் மேற்பட்ட மாணவர்கள் இந்த முகாமில் கலந்துகொண்டு தங்களது கல்விக்கடன் விண்ணப்பங்களை வங்கிகளிடம் அளித்தனர்.

இதனிடையே நடப்பு ஆண்டில் கோவை மாவட்டத்தில் 350 கோடி ரூபாய் கல்வி கடன் வழங்க இலக்கு நிர்ணயம் செய்யப்பட்டுள்ளதாக வங்கி அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். நடப்பு ஆண்டில் இதுவரை மட்டும் 180 ரூபாய் கோடி கல்வி கடன் வழங்கப்பட்டுள்ளது. கல்வி கடன் கோரி விண்ணப்பித்து தகுதியுடைய அனைத்து மாணவர்களுக்கு கடன் வழங்கப்படுகிறது.

இதையும் படிங்க :  காக்கா பிரியாணிக்காக வேட்டையா..? - கொத்து கொத்தாக காகங்களை கொன்ற நபர்..!

மார்ச் மாதத்திலேயே துவங்கியுள்ள இந்த கல்வி கடன் சிறப்பு முகாம்களில் மாணவர்கள் நேரடியாக கலந்து கொள்ளாவிட்டாலும், பெற்றோர்கள் விண்ணப்பங்களை பெற்று விண்ணபிக்கலாம் என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். மேலும், வெளிநாடுகளில் கல்வி பயில 30 லட்சம் ரூபாய் முதல் 50 லட்சம் ரூபாய் வரை கடன் வழங்க உள்ளதாகவும் அதிகாரிகள் கூறினர்.

First published:

Tags: Coimbatore, Education, Local News