ஹோம் /கோயம்புத்தூர் /

தீபாவளிக்காக எத்தனை ரயில்கள் கோவை வழியாக இயக்கப்படுகிறது தெரியுமா? 

தீபாவளிக்காக எத்தனை ரயில்கள் கோவை வழியாக இயக்கப்படுகிறது தெரியுமா? 

கோவை ரயில் நிலையம்

கோவை ரயில் நிலையம்

Coimbatore Special Trains | தீபாவளி மற்றும் பண்டிகைகால விடுமுறையொட்டி பயணிகளின் கூட்ட நெரிசலை தடுக்க கோவை வழியாக ஏராளமான ரயில்கள் இயக்கப்படுகிறது. 

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Coimbatore, India

தீபாவளி மற்றும் பண்டிகை கால விடுமுறையொட்டி பயணிகளின் கூட்ட நெரிசலை தடுக்க கோவை வழியாக ஏராளமான ரயில்கள் இயக்கப்படுகிறது.

இதுகுறித்து சேலம் கோட்ட ரயில்வே நிர்வாகம் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:

தீபாவளி மற்றும் பண்டிகை கால விடுமுறையை முன்னிட்டு பயணிகள் கூட்ட நெரிசலை தவிர்க்கும் வகையில் கோவை - உத்தரப்பிரதேச மாநிலம் கோரக்பூர் இடையிலான சிறப்பு ரயில் (எண்:05304 ), வரும் 11ம் தேதி முதல் அடுத்த மாதம் 8ம் தேதி வரை இயக்கப்பட உள்ளது.

இதையும் படிங்க : குரங்கு அருவி ஏன் கவி அருவியாக மாறியது? - மிஸ் பண்ணாம சுற்றுலா போங்க..!

இந்த ரயில் காலை 4.40 மணிக்கு கோவையில் இருந்து புறப்பட்டு 3வது நாள் காலை 8.35 மணிக்கு கோரக்பூரை சென்றடையும்.  உத்தரப்பிரதேச மாநிலம் கோராக்பூர் - கோவை இடையிலான சிறப்பு ரயில் (05303), கோராக்பூரில் இருந்து வரும் 8ம் தேதி முதல் அடுத்த மாதம் 5ம் தேதி வரை இயக்கப்படுகிறது. இந்த ரயில் கோரக்பூரில் இருந்து 8.30 மணிக்கு புறப்பட்டு 3வது நாள் காலை 7.25 மணிக்கு கோவையை வந்தடைகிறது.

இந்த ரயில், திருப்பூர், ஈரோடு, சேலம், ஜோலார்பேட்டை, காட்பாடி, பெரம்பூர், நெல்லூர், விஜயவாடா, நாக்பூர், போபால், கான்பூர் சென்ட்ரல், கஹளிலபாத் ஆகிய ரயில் நிலையங்களில் நின்று செல்லும்.

உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க

ரயிலில் இரண்டம் வகுப்பு ஏ.சி. பெட்டி-1, மூன்றாம் வகுப்பு ஏ.சி.-2, படுக்கை வசதி பெட்டி-10, சாதாரண பெட்டி-7 இணைக்கப்பட்டுள்ளது. இவ்வாறு அதில்  கூறப்பட்டுள்ளது.

Published by:Karthi K
First published:

Tags: Coimbatore, Local News