ஹோம் /கோயம்புத்தூர் /

இடி, மின்னலின் போது கட்டாயம் செய்யக்கூடாதவை - கோவை மின்வாரியம் விடுத்த எச்சரிக்கை

இடி, மின்னலின் போது கட்டாயம் செய்யக்கூடாதவை - கோவை மின்வாரியம் விடுத்த எச்சரிக்கை

இடி, மின்னல்

இடி, மின்னல்

Coimbatore Today News | இடி மின்னலின் போது இதை எல்லாம் கட்டாயம் நீங்கள் பயன்படுத்த வேண்டாம் என்று மின் வாரியம் சார்பில் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. ஆகையால், கோவை மக்களே நீங்கள் அறவே தவிர்ப்பது நல்லது.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Coimbatore, India

இடி மின்னலின் போது இதை எல்லாம் கட்டாயம் நீங்கள் பயன்படுத்த வேண்டாம் என்று மின் வாரியம் சார்பில் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. ஆகையால், கோவை மக்களே நீங்கள் இவற்றை அறவே தவிர்ப்பது நல்லது.!

கோவை மின் பகிர்மான வட்ட மேற்பார்வை பொறியாளர் (பொறுப்பு) சுதா வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது, இடி அல்லது மின்னலின் போது உடனடியாக கான்கிரீட் கூரையாலான பெரிய கட்டிடம், வீடு அல்லது பஸ், வேன், கார் போன்றவற்றில் தஞ்சமடைய வேண்டும். குடிசை வீட்டிலோ, மரத்தின் அடியிலோ, பஸ் நிறுத்த நிழற்குடையின் கீழோ தஞ்சமடையக் கூடாது.

திறந்த நிலையில் உள்ள ஜள்ளல்கள், கதவு போன்றவற்றின் அருகில் இருக்கக் கூடாது. இடி இடிக்கும்போது கண்டிப்பாக டி.வி.க்கு வரும் கேபிள் இணைப்பை துண்டித்துவிட வேண்டும். மின்மாற்றியில் பியூஸ் போயிருந்தால் அதனை சரி செய்ய மின் ஊழியர்களிடம் தெரிவிக்க வேண்டும்.

Must Read : விழுப்புரத்தில் பிறந்து நடிப்புக்கே இலக்கணம் தந்து... சர்வதேச விருதை வென்ற நடிகர் - இவர் யார் தெரியுமா? 

மழைக் காலங்களில் மின் மாற்றிகள், மின் கம்பிகள், மின் பகிர்வு பெட்டிகளின் இழுவை கம்பிகள் அருகே செல்ல வேண்டாம். வீட்டில் உள்ள மின் சாதனத்தில் அதிர்ச்சியை உணர்ந்தால், உடனே வீட்டி உள்ள மெயின் சுவிட்ச்சை உலர்ந்த ரப்பர் காலணிகளை அணிந்து சென்று அணைத்துவிட வேண்டும்.

பின்னர் உடனடியாக மின்வாரிய அலுவலகத்துக்கு தகவல் தெரிவிக்க வேண்டும். இடி. மின்னலின் போது டி.வி, மிக்ஸி, கிரைண்டர், கணினி, செல்போன் போன்ற மின்சாதனப் பொருட்கள் பயன்படுத்துவதை தவிர்க்க வேண்டும்.

உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க

ஈரமான கைகளால் சுவிட்சை தொட வேண்டாம். மழை பெய்யும்போது கேபிள் வயர்களை தொடக்கூடாது. மின் கம்பத்திலோ அவற்றை தாங்கும் கம்பிகளிலோ கால்நடைகளை கட்ட வேண்டாம் என்று தெரிவிக்கப் பட்டுள்ளது.

Published by:Suresh V
First published:

Tags: Coimbatore, Local News, Thunder, TNEB