வையில் சமீப நாட்களாக விவாகரத்து கேட்டு வழக்கு தொடரும் தம்பதியினர் எண்ணிக்கை அதிகரித்து வருவதாக வழக்கறிஞர் அதிர்ச்சிகர தகவலை கொடுத்துள்ளார்.
கோவை மாவட்டத்தில் ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்திற்குள் குடும்ப நல நீதிமன்றம் செயல்பட்டு வருகிறது. இந்த நீதிமன்றம் குடும்ப பிரச்சனைகள் மற்றும் விவாகரத்து தொடர்பான வழக்குகளை விசாரித்து தீர்வு வழங்கி வருகிறது.
இந்த வழக்குகள் எண்ணிக்கை அதிகரித்து வருவதால் கூடுதல் குடும்ப நல நீதிமன்றமும் துவங்கப்பட்டு செயல்பட்டு வருகிறது.
கோவையில் ஆண்டுதோறும் விவாகரத்து கேட்டு நீதிமன்றத்தை நாடுவோர் எண்ணிக்கை அதிகரித்து வருவதாக வழக்கறிஞர் முபீனா தெரிவிக்கிறார். கடந்த 5 மாதங்களில் மட்டும் கோவை நீதிமன்றத்தில் 2157 விவாகரத்து வழக்குகள் பதிவாகியுள்ளன.இது கடந்த காலங்களைக் காட்டிலும் அதிகம்.
பொதுவாக விவாகரத்து கேட்டு வருபவர்கள் தாம்பத்திய உறவில் பிரச்சனை என்று கூறி விவாகரத்து கேட்பதாகவும் வழக்கறிஞர் தெரிவிக்கிறார்.
செய்தியாளர் : சௌந்தர்மோகன்
உங்கள் நகரத்திலிருந்து(Coimbatore)
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.