ஹோம் /கோயம்புத்தூர் /

கோவையைக் கலக்கவுள்ள மினி செஸ் ஒலிம்பியா- போட்டியில் பங்கேற்க விவரம் தெரிஞ்சுக்கோங்க

கோவையைக் கலக்கவுள்ள மினி செஸ் ஒலிம்பியா- போட்டியில் பங்கேற்க விவரம் தெரிஞ்சுக்கோங்க

மாதிரிப் படம்

மாதிரிப் படம்

கோயம்புத்தூரில் மாவட்ட அளவில் செஸ் போட்டி நடைபெறவுள்ளது.

 • News18 Tamil
 • 1 minute read
 • Last Updated :
 • Coimbatore, India

  சென்னைக்கு போட்டியாக கோவையில் மாவட்ட அளவில் மினிசெஸ் ஒலிம்பியா போட்டி வரும் 30ம் தேதி சின்னவேடம்பட்டியில் நடைபெறவுள்ளது.

  சென்னை அருகே மாமல்லபுரத்தில், 44 வது செஸ் ஒலிம்பியாட் போட்டி இன்று துவங்குகிறது. அடுத்த மாதம் (ஆகஸ்டு) 10-ந்தேதி வரை நடைபெற உள்ளது. 1927-ம் ஆண்டு முதல் நடத்தப்பட்டு வரும் கவுரவமிக்க இந்த போட்டி, ஆசியாவில் 30 ஆண்டுகளுக்கு பிறகும், இந்தியாவில் முதல் முறையாகவும் நடைபெறுகிறது. இதில் 187 நாடுகள் பங்கேற்கின்றன.

  இந்நிலையில், மாவட்ட அளவிலான செஸ் போட்டி, சின்னவேடம்பட்டியில் 'மினி செஸ் ஒலிம்பியா' என்ற பெயரில் மாவட்ட அளவிலான போட்டி வரும் 30ம் தேதி நடக்கிறது.

  டி.கே.எஸ். மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி சார்பில், அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளி மாணவ, மாணவிகளுக்கு மாவட்ட அளவிலான செஸ் போட்டி, கவுமார மடாலயம் கலையரங்கில் நடக்கிறது.

  மாணவ, மாணவியருக்கு, 7, 9, 11, 13, 15, 17 ஆகிய வயது பிரிவில் போட்டிகள் நடக்கின்றன. ஒவ்வொரு பிரிவிலும் 10 போட்டியாளர்களுக்கு சிறப்பு பரிசுகள் வழங்கப்படுகின்றன.

  போட்டியில் பங்கேற்க அனுமதி இலவசம். விவரங்களுக்கு, 96292- 29052 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.

  Published by:Karthick S
  First published:

  Tags: Coimbatore, Local News