Home /coimbatore /

தென்னையில் நோய் தாக்குதலை கட்டுப்படுத்தும் வழிமுறைகள் - கோவை வேளாண் அதிகாரி விளக்கம்!

தென்னையில் நோய் தாக்குதலை கட்டுப்படுத்தும் வழிமுறைகள் - கோவை வேளாண் அதிகாரி விளக்கம்!

தென்னையில் நோய் தாக்குதலை தடுக்கும் வழிமுறைகள்

தென்னையில் நோய் தாக்குதலை தடுக்கும் வழிமுறைகள்

COIMBATORE :கோவை மாவட்டம் பொள்ளாச்சி பகுதியில் தென்னையை நோய் தாக்குதல்களில் இருந்து மரங்களை பாதுகாப்பது தொடர்பாக விவசாயிகள் செய்யவேண்டியவை குறித்து வேளாண் அதிகாரி முக்கிய அறிவுரை வழங்கியுள்ளனர்.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Coimbatore, India
கோயம்புத்தூர் மாவட்டம் பொள்ளாச்சி வடக்கு வட்டார, வேளாண் விரிவாக்க மையத்தின் கீழ், 48 கிராமங்கள் உள்ளன. இந்த கிராமங்களில், தென்னை சாகுபடி செய்துள்ள விவசாயிகள், மரங்களை நோய் தாக்குதல்களில் இருந்து பாதுகாக்க மேற்கொள்ள வேண்டிய பணிகள் குறித்து வேளாண் அதிகாரி அறிவுறுத்தியுள்ளார்.

இது குறித்து, பொள்ளாச்சி வடக்கு வட்டார வேளாண் உதவி இயக்குனர் மீனாம்பிகை கூறுகையில், பொதுவாக, ரூகோஸ் வெள்ளை ஈ, கேரளா மற்றும் தஞ்சாவூர் வாடல் நோய் ஆகியவை, தென்னை மரங்களை பாதிக்கும். இந்த நோய் தாக்குதல்களில் இருந்து பாதுகாக்க, நடவு செய்யப்பட்டு ஐந்து ஆண்டுகள் பூர்த்தியான, தென்னை மரம் ஒன்றுக்கு, 1.25 கிலோ யூரியா, 2 கிலோ சூப்பர், 3.50 கிலோ பொட்டாஷ், 5 கிலோ வேப்பம் புண்ணாக்கு ஆகியவை கலந்த உரத்தை, ஆண்டுக்கு இருமுறை சம விகிதத்தில் இடவேண்டும்.

இதையும் படிங்க : கோவையில் சில்லென்று கொட்டும் அழகிய அருவிகள்... இவை சுற்றுலா பயணிகள் மிஸ் பண்ணக்கூடாத இடங்கள்!


வெள்ளை ஈ தாக்குதலை கட்டுப்படுத்த, கிரைசோபெர்லா, முட்டை ஓட்டுண்ணி ஆகியவை, 150 ரூபாய் மானியத்தில், மாநில வளர்ச்சி திட்டத்தின் கீழ் கொடுக்கப்படுகிறது. இவற்றை வாங்கி, தென்னை ஓலைகளில் மீது, ஒட்டி விட்டால் ஒட்டுண்ணிகள் பெருகி, வெள்ளை ஈயை கட்டுப்படுத்தும்.

உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க

தற்போது, கிரைசோபெர்லா முட்டை ஓட்டுண்ணிகள், 150 ஹெக்டேர் பரப்பளவிற்கு தேவையான அளவிற்கே, கையிருப்பில் உள்ளன. எனவே, கிரைசோபெர்லா முட்டை ஓட்டுண்ணிகள் தேவைப்படுவோர், அந்தந்த பகுதிகளில் உள்ள உதவி வேளாண் அலுவலர்களை தொடர் கொள்ளலாம் என்று தெரிவித்துள்ளார்.
Published by:Lakshmanan G
First published:

Tags: Coimbatore, Local News

அடுத்த செய்தி