கோயம்புத்தூர் மாவட்டத்தை சேர்ந்த பேரிடர் மேலாண்மை நிபுணர் எந்த நேரத்தில் எவ்வளவு அளவு உணவு சாப்பிட வேண்டும் என்று விளக்கமளிக்கிறார்.
உணவுப் பழக்கம்
இன்றைய காலகட்டத்தில் பணி நிமித்தம், கலாச்சார மாற்றம், அன்றாட வாழ்க்கையில் மாற்றம் உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் நமது உணவுப் பழக்கம் குறிப்பிடத்தக்க மாற்றம் ஏற்பட்டுள்ளது. காலை உணவை தவிர்ப்பது, இரவு உணவை தவிர்ப்பது என பலரும் உணவின் முக்கியத்துவத்தை உணராதவர்களாக மாறியுள்ளனர்.
சாப்பிடும் வழிமுறை
இதனிடையே எந்த நேரத்தில் எந்த அளவு உணவை எடுத்துக் கொள்ள வேண்டு என்பது குறித்து விளக்கம் அளிக்கிறார் பேரிடர் மேலாண்மை நிபுணரும், ஃபர்ஸ்ட் ஹார்ட் பவுண்டேசனின் நிறுவனருமான சரவணன். இதுகுறித்து சரவணன் கூறியதாவது, “தமிழில் ஒரு பழமொழி உண்டு. காலையில் இளவரசன் போல் சாப்பிட வேண்டும். ஏனென்றால் அடுத்த தலைமுறையை ஊட்டி வளர்க்க வேண்டும் என்பதாக பொருள். மதியம் ராஜா போலவும், மாலை மந்திரி போலவும், இரவு பிச்சைக்காரர்கள் போலவும் சாப்பிட வேண்டும் என்பார்கள்.
எந்த நேரத்தில் உணவு சாப்பிட வேண்டும்
காலையில் செரிமானத்திற்கான ரசாயனங்கள் வயிற்றில் உற்பத்தியாகிறது. இவை காலை 7 முதல் 8.30க்குள் உற்பத்தியாகிவிடும். மதியம் 50 சதவீதமும், இரவில் 10 சதவீதமும் மட்டுமே உற்பத்தியாகும். இதனால் தான் காலையில் 7.30 மணி முதல் 8.30 மணிக்குள் சாப்பிட வேண்டும். காலையில் முழுமையான உணவை எடுத்துக் கொள்ள வேண்டும். நேரம் கழித்து உணவை எடுத்துக் கொண்டால் முறையாக செரிமானம் ஆகாது. இதனால் மலம் கழித்தலின்போது முக்குதல் நேரிடும். இது பைல்ஸ் மற்றும் இதய பிரச்சனைகளுக்கு வழிவகுக்கும்.
உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க
மதியம் 12 மணி முதல் 2 மணிக்குள் சாப்பிட வேண்டும், மாலை 4 மணியிலிருந்து 5 மணிக்குள் (தின்பண்டங்கள் தவிர்த்து), இரவு 7.30 மணி முதல் 8.30 மணிக்குள் சாப்பிட வேண்டும். காலையில் உட்கொண்ட 100 சதவீத உணவில் மதியம் 50 சதவீதமும், மாலை 25 சதவீதமும், இரவில் 10 சதவீதமும் உணவு எடுத்துக் கொள்ள வேண்டும். இரவு நேரத்தில் அதிக நார்ச்சத்து நிறைந்த உணவை எடுத்துக் கொள்ளக்கூடாது,” இவ்வாறு அவர் கூறினார்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Coimbatore, Local News