ஹோம் /கோயம்புத்தூர் /

முற்றிலுமாக சிதிலமடைந்துள்ள கோவை சிங்காநல்லூர் படகு இல்லம்... சுற்றுலா பயணிகள் ஏமாற்றம்...

முற்றிலுமாக சிதிலமடைந்துள்ள கோவை சிங்காநல்லூர் படகு இல்லம்... சுற்றுலா பயணிகள் ஏமாற்றம்...

சிங்காநல்லூர்

சிங்காநல்லூர் படகு இல்லம்

Coimbatore Boathouse |  சிங்காநல்லூர் சுற்றுவட்டாரப்பகுதி மக்களின் பொழுதுபோக்கு இடமாக திகழ்ந்த சிங்காநல்லூர் படகு இல்லத்தை புதுப்பிப்பதோடு, குளத்தை மாநகராட்சி நிர்வாகம் முறையாக பராமரிக்க வேண்டும் என்பதே அப்பகுதி மக்களின் கோரிக்கையாக உள்ளது.

மேலும் படிக்கவும் ...
  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Coimbatore, India

கோவையின் முதல் படகு இல்லமாக திகழ்ந்த சிங்காநல்லூர் படகு இல்லம் முற்றிலுமாக சிதிலமடைந்துள்ளது. இதனால் சுற்றுலா பயணிகள் ஏமாற்றத்தில் உள்ளனர்.

கோவை திருச்சி சாலையில் சிங்காநல்லூர் அருகே அமைந்துள்ளது சிங்காநல்லூர் குளம். ஊட்டிக்கு அடுத்தபடியாக கோவை மக்களுக்கான பெரிய படகு இல்லம் இங்கு அமைக்கப்பட்டது. இதில் படகு சவாரி செய்ய சுற்றுலா பயணிகள் மிகுந்த ஆர்வம் காட்டி வந்தனர்.

சரியாக பராமரிக்கப்படாமல் இருந்த இந்த படகு இல்லம் கடந்த 2015ம் ஆண்டு சுமார் 30 லட்சம் ரூபாய் மதிப்பில் புனரமைக்கப்பட்டது. எனினும் மக்கள் பயன்பாட்டிற்கு படகு இல்லம் திறக்கப்படவில்லை. புனரமைக்கப்பட்டும் படகு இல்லம் மக்கள் பயன்பாட்டிற்கு வராததால் மீண்டும் இந்த பகுதி சிதிலமடைந்தது.

இதையும் படிங்க :  கொப்பரை தேங்காய் விற்பனை - கோவை விவசாயிகளுக்கு நிலுவை தொகை எப்போது கிடைக்கும்?

இந்த பகுதியை பல்லுயிர் பாதுகாப்பு மண்டலமாக அறிவித்த போதும், குளத்தில் படர்ந்துள்ள ஆகாயத்தாமரை செடிகளால் இங்கு வாழும் மற்ற உயிரினங்களுக்கு ஆபத்து ஏற்படவும் வாய்ப்பு உள்ளது. இதனிடையே ஆகாயத்தாமரை செடிகளை தூர்வார மாநகராட்சி நிர்வாகமும் முன்வரவில்லை.

சிங்காநல்லூர் சுற்றுவட்டாரப்பகுதி மக்களின் பொழுதுபோக்கு இடமாக திகழ்ந்த சிங்காநல்லூர் படகு இல்லத்தை புதுப்பிப்பதோடு, குளத்தை மாநகராட்சி நிர்வாகம் முறையாக பராமரிக்க வேண்டும் என்பதே அப்பகுதி மக்களின் கோரிக்கையாக உள்ளது.

உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க

Published by:Karthi K
First published:

Tags: Coimbatore, Local News