முகப்பு /கோயம்புத்தூர் /

காந்தாரா அலங்காரத்தில் உலா வந்த பக்தர்கள்.. ஆலாந்துறை கோவில் திருவிழாவில் வினோத வழிபாடு..

காந்தாரா அலங்காரத்தில் உலா வந்த பக்தர்கள்.. ஆலாந்துறை கோவில் திருவிழாவில் வினோத வழிபாடு..

X
காந்தாரா

காந்தாரா அலங்காரத்தில் உலா வந்த பக்தர்கள்

Coimbatore Aalanthurai Temple : கோவை ஆலாந்துறை காமாட்சி அம்மன் கோவில் திருவிழாவில் பக்தர்கள் காந்தாரா காவல் தெய்வ அலங்காரத்தில் கலந்துகொண்டு நேர்த்திக்கடன் செலுத்தினர்.

  • Last Updated :
  • Coimbatore, India

கோயம்புத்தூர் மாவட்டம் ஆலந்துறையில் பிரசித்திபெற்ற ஸ்ரீ காமாட்சி அம்மன் திருக்கோவில் அமைந்துள்ளது. 100 ஆண்டுகள் பழமை வாய்ந்த இந்த கோவிலில் இந்தாண்டு திருவிழா நடைபெற்றது.

கடந்த மாதம் 25ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கிய கோவில் திருவிழாவில் ஒவ்வொரு நாளும் சிறப்பு அலங்கார பூஜைகள் நடைபெற்று காமாட்சி அம்மன் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். இதனைத்தொடர்ந்து அம்மனுக்கு நேர்த்திக்கடன் செலுத்தும் திருவிழா நடைபெற்றது. வான வேடிக்கைகளுடன், மேளதாளங்கள் முழங்க அப்பகுதியைச் சேர்ந்த ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு நேர்த்திக்கடன் செலுத்தினர்.

இதில் காமாட்சி அம்மனுக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு மாலையில் 501 பக்தர்கள் பூவோடு எடுத்தனர். மேலும் பறவை வாகனத்தில் அலகு குத்துதல், ஆணி கால் செருப்பு, பால்குடங்கள் போன்ற நேர்த்திக்கடன்கள் செலுத்தப்பட்டது.

காந்தாரா அலங்காரத்தில் உலா வந்த பக்தர்கள்

உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க

இதில் பக்தர்கள் காந்தாரா போன்ற காவல் தெய்வங்களின் அலங்காரத்துடன் ஊர்வலம் மேற்கொண்டனர். தொடர்ந்து வண்ணமிகு வான வேடிக்கை நிகழ்ச்சி நடைபெற்றது. இதனை ஏராளமான பொதுமக்கள் கண்டுகளித்தனர். தொடர்ந்து மாவிளக்கு வழிபாடு, முளைப்பாரி வழிபாடு மற்றும் மஞ்சள் நீராட்டு விழாவுடன் திருவிழா நிறைவடைந்தது.

First published:

Tags: Coimbatore, Local News