முகப்பு /செய்தி /கோயம்புத்தூர் / வெள்ளியங்கிரி மலையில் துணிகளை வீசுவதை நிறுத்துங்கள்.. பக்தர்களுக்கு வனத்துறை வேண்டுக்கோள்..!

வெள்ளியங்கிரி மலையில் துணிகளை வீசுவதை நிறுத்துங்கள்.. பக்தர்களுக்கு வனத்துறை வேண்டுக்கோள்..!

வெள்ளியங்கிரி மலையேறும் பக்தர்கள்

வெள்ளியங்கிரி மலையேறும் பக்தர்கள்

Velliangiri Hills | வெள்ளியங்கிரி மலையில் துணிகளை வீசி செல்ல வேண்டாம் என பக்தர்களுக்கு வனத்துறை வேண்டுகோள் விடுத்துள்ளது.

  • Last Updated :
  • Coimbatore, India

பூண்டி வெள்ளியங்கிரி மலையேறும் பக்தர்கள் தங்களின் பழைய துணிகளை வனப் பகுதிக்குள் விட்டுச் செல்ல வேண்டாம் என வனத் துறையினர் வேண்டுகோள் விடுத்து உள்ளனர்.

தென் கைலாயம் எனப்படும் பூண்டி வெள்ளியங்கிரி மலையில் ஏழாவது மலை உச்சியில் சுயம்புவாக உள்ள ஈசனை தரிசிக்க கடந்த பிப்ரவரி மாதம் முதல் பக்தர்கள் மலை ஏற வனத் துறையினர் அனுமதி அளித்தனர். பக்தர்கள் வனப் பகுதிக்குள் பிளாஸ்டிக் மற்றும் துணிகளை விட்டுச் செல்ல வேண்டாம். எளிதில் தீப்பிடிக்கும் பொருட்களை கொண்டு செல்லக் கூடாது எனவும் அறிவுறுத்தி இருந்தனர்.இதனால் வெள்ளியங்கிரி மலை அடிவாரத்தில் வனத் துறையினர் மலையேறும் பக்தர்களை சோதனை செய்து தீப் பிடிக்கப் பொருட்கள் மற்றும் பிளாஸ்டிக் கவர்களை பறிமுதல் செய்த பின் மலையேற அனுமதித்து வருகின்றனர்.

இந்நிலையில் ஆறாவது மலையில் பக்தர்கள் விட்டுச் செல்லும் பழைய துணிகள் வனப் பகுதி முழுவதும் குவிந்து உள்ளன. இதனால் வனப்பகுதியில் மாசுபடும் நிலை ஏற்பட்டு உள்ளது.

மேலும் படிக்க... மேலூரில் பெட்ரோல் குண்டு வீச்சு..!

இது குறித்து வனத்துறை அதிகாரிகள் கூறும் போது, “ வெள்ளியங்கிரி மலை ஏறும் பக்தர்களை சோதனை செய்த பின்பு மலையேற அனுமதிக்கிறோம். சோதனையின் போது பிளாஸ்டிக் இருந்தால் பறிமுதல் செய்கிறோம். பிளாஸ்டிக் வாட்டர் பாட்டில்கள், வைப்பு தொகை பெற்றுக் கொண்டு ஸ்டிக்கர் ஒட்டுகிறோம். கீழே இறங்கிய பின் பிளாஸ்டிக் வாட்டர் பாட்டில்களை பெற்றுக் கொண்டு அவர்கள் செலுத்திய வைப்பு தொகையை அவர்களுக்கு திரும்பி கொடுக்கிறோம். இதனால் வனப்பகுதியில் பிளாஸ்டிக் வீசுவது தடுக்கப்பட்டு உள்ளது.

இதுவரை பக்தர்களிடம் இருந்து 10.85 டன் பிளாஸ்டிக் கைப்பற்றி உள்ளோம்.  ஆறாவது மலை ஆண்டி சுனையில் குளிக்கும் பக்தர்கள் ஆடைகளை வனப் பகுதியில் வீசி செல்கின்றனர். தன் ஆர்வலர்கள் உதவியுடன் அவற்றை சேகரித்து வெயிலில் காய வைத்து மூட்டை கட்டி அடிவாரத்திற்கு கொண்டு வந்து உள்ளோம். இப்படி 500 கிலோ துணிகளை கொண்டு வந்து உள்ளோம்: என்று கூறினார்.

மேலும்,” மலையேறும் பக்தர்கள் இயற்கையை, பாதுகாக்கவும், புண்ணிய ஸ்தலத்தை சுத்தமாக வைத்து இருக்கவும் வனப் பகுதியில் துணிகளை வீசி வருவதை நிறுத்த வேண்டும்” என்றும் அவர்கள் வேண்டுகோள் விடுத்தனர்.

top videos

    செய்தியாளர்: வைரம் பெருமாள் அழகுராஜன், கோவை

    First published:

    Tags: Coimbatore, Forest Department