முகப்பு /கோயம்புத்தூர் /

இணைய வழியில் பட்டப்படிப்பு படிக்கலாம்... உடனே விண்ணப்பியுங்கள்... பாரதியார் பல்கலைக்கழகம் அறிவிப்பு..!

இணைய வழியில் பட்டப்படிப்பு படிக்கலாம்... உடனே விண்ணப்பியுங்கள்... பாரதியார் பல்கலைக்கழகம் அறிவிப்பு..!

X
பாரதியார்

பாரதியார் பல்கலைக்கழகம்

இணையவழி கல்வி மூலமாக சில குறிப்பிட்ட பாடப்பிரிவுகளை கற்க முடியும் என்று பல்கலைக்கழக நிர்வாகம் அறிவித்துள்ளது.

  • News18 Tamil
  • 1-MIN READ
  • Last Updated :
  • Coimbatore, India

பாரதியார் பல்கலைக்கழகம் தொலைதுார கல்வி முறையில் பட்டப்படிப்புகளை வழங்கி வருகிறது. இதே பல்கலைக்கழகத்தில் இணைய வழியிலும் இளநிலை மற்றும் முதுநிலை படிப்புகள் வழங்கப்படுகிறது. இதற்கான மாணவர் சேர்க்கை மார்ச் மாதம் 3ம் தேதி முதல் தொடங்குகின்றது. இணையவழி கல்வி மூலமாக சில குறிப்பிட்ட பாடப்பிரிவுகளை கற்க முடியும் என்று பல்கலைக்கழக நிர்வாகம் அறிவித்துள்ளது.

மேலும் உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற இங்கே கிளிக் செய்யவும்

அதன்படி, இளநிலை படிப்புகளில் பி.ஏ ஆங்கிலம், பி.பி.ஏ, பி.காம். ஆகிய படிப்புகளை படிக்கலாம். முதுநிலை பிரிவுகளின் கீழ் எம்.ஏ., தமிழ் இலக்கியம், ஆங்கில இலக்கியம், எம்.ஏ, பொருளாதாரம், எம்.காம், எம்.காம், நிதி மற்றும் கணக்கு பதிவியல், எம்.ஏ, தொழில் நெறி வழிகாட்டுதல் ஆகிய படிப்புகளை படிக்கலாம். இணையவழியில் இந்த பாடப்பிரிவுகளுக்கு மட்டுமே மாணவர் சேர்க்கை நடைபெறுகிறது.

இணையவழி படிப்புக்கு விண்ணப்ப பதிவு, சேர்க்கை, கட்டணம் செலுத்துதல், தேர்வு, தேர்வு முடிவு அறிவிப்பு, சான்றிதழ் வழங்குதல் என அனைத்தும் இணையவழியில் மட்டுமே நடைபெற உள்ளது.

இதையும் படிக்க :  NEET UG (2023) : நீட் தேர்வு ஆன்லைன் விண்ணப்ப செயல்முறை எப்போது தொடங்கும்?

மார்ச் மாதம் 3ம் தேதி தொடங்கி 31ம் தேதி வரை மாணவர்கள் தங்களது விண்ணப்பங்களை சமர்ப்பிக்கலாம் என்றும் பல்கலைக்கழக நிர்வாகம் அறிவித்துள்ளது. இது தொடர்பான மேலும் விபரங்களுக்கு, https://b-u.ac.in/ என்ற இணையதள முகவரியை பார்க்கலாம்.

First published:

Tags: Bharathiar University, Coimbatore, Local News