Home /coimbatore /

மாடித் தோட்டம் அமைப்பவர்களுக்கு குட் நியூஸ்: கோவையில் ரூ.20க்கு நாட்டுக் காய்கறி விதை விற்பனை

மாடித் தோட்டம் அமைப்பவர்களுக்கு குட் நியூஸ்: கோவையில் ரூ.20க்கு நாட்டுக் காய்கறி விதை விற்பனை

மாதிரிப் படம்

மாதிரிப் படம்

தோட்டக்கலைக் துறை துணை இயக்குநா் அலுவலக வளாகத்தில், செயல்பட்டு வரும் விற்பனையகத்தில் நாட்டுக் காய்கறி விதைகள் குறைந்த விலையில் விற்பனை செய்யப்படுகிறது.

    கோவையில் 20 ரூபாய்க்கு நாட்டுக் காய்கறி விதைகள் தோட்டக் கலைத் துறை சாா்பில் விற்பனை செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

    தோட்டக்கலைக் துறை துணை இயக்குநா் அலுவலக வளாகத்தில், செயல்பட்டு வரும் விற்பனையகத்தில் நாட்டுக் காய்கறி விதைகள் குறைந்த விலையில் விற்பனை செய்யப்படுகிறது.

    சிவப்பு கொடி பீன்ஸ், கும்பசுரை, மாட்டுக் கொம்பு வெண்டை, பருமன் வெண்டை, சிட்டு சுரை, மெழுகு பீா்கன், முள் வெள்ளரி, சுனை வெண்டை, வெள்ளை வெண்டை, டி-பட்டை வெண்டை, பா்ப்பிள் பீன்ஸ், வரி தக்காளி, பரங்கி, முள்ளங்கி, பச்சை புளிச்சகீரை, பச்சை கத்தரி, கும் தக்காளி, சாம்பார் வெள்ளரி, பழ வெள்ளரி உள்ளிட்ட அரியவகை நாட்டுக் காய்கறி விதைகள் விற்பனை செய்யப்படுகின்றன.

    வீட்டு தோட்டம், மாடித் தோட்டம் அமைப்பவர்கள் குறைந்த விலையில் 20 ரூபாய்க்கு வாங்கி பயன்பெறலாம் என தோட்டகலைத் துறை துணை இயக்குநா் எம்.புவனேஸ்வரி தெரிவித்தார்.
    Published by:Karthick S
    First published:

    Tags: Coimbatore, Local News

    அடுத்த செய்தி