முகப்பு /கோயம்புத்தூர் /

கோவையில் 500 பேருக்கு உணவு பொருட்கள் வழங்கிய தாவூதி போரஸ்!

கோவையில் 500 பேருக்கு உணவு பொருட்கள் வழங்கிய தாவூதி போரஸ்!

X
கோவையில்

கோவையில் 500 பேருக்கு உணவு பொருட்கள் வழங்கிய தாவூதி போரஸ்

Kovai Food items Provided | கோவையில் தாவூதி போராஸ் சமூகத்தினர் சார்பில் ஏழை எளிய மக்களுக்கு உணவு பொருட்கள் வழங்கப்பட்டன.

  • 1-MIN READ
  • Last Updated :
  • Coimbatore, India

கோயம்புத்தூரில் தாவூதி போராஸ் சமூகத்தினர் சார்பில் ஏழை எளிய மக்களுக்கு உணவு பொருட்கள் வழங்கப்பட்டன. இந்த நிகழ்வில் மதநல்லினக்கத்தை வலியுறுத்தும் வகையில் மூன்று மதங்களை சேர்ந்தவர்களும் கலந்து கொண்டனர்.

கோவை நவ இந்தியா பகுதியில் தாவூதி போராஸ் இஸ்லாமிய சமூக மக்களின் மசூதி அமைந்துள்ளது. இங்கு மூன்று மாதங்களுக்கு ஒரு முறை ப்ராஜக்ட் ரைஸ் என்ற பெயரில் ஏழை எளிய மக்களுக்கு உணவுப் பொருட்கள் மற்றும் பள்ளி குழந்தைகளுக்கு பள்ளி உபகரணங்களை வழங்கி வருகின்றனர்.

கோவையில் 500 பேருக்கு உணவு பொருட்கள் வழங்கிய தாவூதி போரஸ்

இதனிடையே தாவூதி போராஸ் சமூகத்தினர் சார்பில் திங்கட்கிழமையன்று ஏழை மக்களுக்கு உணவுப் பொருட்கள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் தாவூதி போரா மஸ்ஜித் தலைவர் மோஹிஸ் மண், சி.எஸ்.ஐ கோவை மறை மாவட்ட பேராயர் திமோத்தி ரவீந்தர், தொழிலதிபர் ஸ்ரீனிவாசகிரி மற்றும் முன்னாள் எம்.எல்.ஏ நா.கார்த்திக் ஆகியோர் கலந்து கொண்டு பொதுமக்களுக்கு 5 கிலோ அரிசி மற்றும் பருப்பு ஆகியவற்றை வழங்கினர்.

நிகழ்ச்சியின் ஒரு பகுதியாக ஒடிசா ரயில் விபத்தில் உயிரிழந்த பொதுமக்களுக்கு மவுன அஞ்சலி செலுத்தப்பட்டது. இதனைத் தொடர்ந்து பேராயர் திமோத்தி ரவீந்தர் பேசுகையில், "இந்தியாவில் அனைவருக்கும் உணவு உள்ளது. பேராசைக்கு உணவு கிடையாது என்று மகாத்மா காந்தி தெரிவித்துள்ளார். ஏழ்மை நிலை மற்றும் மக்களுக்கு உணவு இல்லை என்பது ஒரு குற்றச்செயல். இந்த நிலையை மாற்ற தாவூதி போரா அமைப்பினர் எடுத்துள்ள முன்னெடுப்பு பாராட்டத்தக்கது. அனைவரும் ஒன்றாக இருந்து இன்புற்றுவாழ வேண்டும் என்று பாரதி கூறியதை நாம் அனைவரும் கடைபிடிக்க வேண்டும்" என்றார்.

உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க

First published:

Tags: Coimbatore, Local News