தமிழ் கடவுள் முருக பெருமானின் 2ம் படை வீடு என்று அழைக்கப்படும் திருச்செந்தூர் முருகன் திருக்கோவிலில் ஆண்டுதோறும் கந்த சஷ்டி பெருவிழா கொண்டாடப்படுவது வழக்கம். இந்நிலையில், கந்த சஷ்டி பெருவிழாவின் முக்கியத்துவத்தை உலகறிய செய்ய கோவையில் இயங்கி வரும் பக்தி நாட்டிய நிகேதன் பள்ளி சார்பில் நாட்டிய நாடகம் நடத்தப்பட உள்ளது. திருசெந்தூர் எனும் பெயரில் கோவை சரவணம்பட்டி பகுதியில் உள்ள குமரகுரு கல்லூரியில் இந்த குழு நாட்டிய நாடகம் வரும் 26ம் தேதி நடைபெறுகிறது. இதில் நாட்டிய பள்ளி இயக்குநர் கருணா சாகரி மற்றும் 6 பேர் கொண்ட குழுவினர் 2ம் நூற்றாண்டு முதல் 21ம் நூற்றாண்டு வரை உள்ள 14 காவியங்களில் முருகன் குறித்த பாடல்களை தேர்வு செய்து அதனை நாட்டிய நாடகமாக அரங்கேற்ற உள்ளனர்.
இதுகுறித்து கருணா சாகரி கூறியதாவது, “முருகரின் கந்த சஷ்டி பெருவிழாவை உலகறிய செய்யும் வகையில், திருச்செந்தூர் எனும் குழு நடனத்தை வடிவமைத்து உள்ளோம். இந்த நடனத்தை உலகறிய செய்யும் முயற்சியாக மலேசியா, சிங்கப்பூர், கனடா, வட அமெரிக்கா போன்ற பகுதிகளில் இந்த குழு நடனத்தை அரங்கேற்ற உள்ளோம். இதற்காக நிதி திரட்டும் வகையில் கோவையில் இந்த நாட்டிய நாடக நிகழ்ச்சி 26ம் தேதி நடத்தப்படுகிறது. இதில் 7 புகழ் மிக்க இசைக் கலைஞர்கள், மற்றும் 14க்கும் மேற்பட்ட இசைக் கருவிகளைக் கொண்டு, இசை நிகழ்ச்சி நடத்தப்பட உள்ளது.
உலகெங்கும் உள்ள முருக பக்தர்களை பக்தி எனும் ஒரே நேர் கோட்டில் நிறுத்த வேண்டும் என்று இந்த சுற்றுப் பயணத்தை மேற்கொள்ள உள்ளோம். இந்த நாட்டிய நாடக நிகழ்ச்சிக்கு ரூ.2000, ரூ.1000, ரூ.500 மற்றும் ரூ.400 என்று நுழைவு கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது” என்று அவர் கூறினார்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Coimbatore, Local News