ஹோம் /கோயம்புத்தூர் /

கோவையில் குழந்தைகள் தினம் கொண்டாடிய அழகு குட்டி செல்லங்கள்

கோவையில் குழந்தைகள் தினம் கொண்டாடிய அழகு குட்டி செல்லங்கள்

குழந்தைகள்

குழந்தைகள் தின கொண்டாட்டம்

Coimbatore | குழந்தைகள் தினத்தை முன்னிட்டு கோவையில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் நடைபெற்ற கலைநிகழ்ச்சியில் குழந்தைகள் அசத்தலாக நடனமாடினர்.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Coimbatore, India

கள்ளம் கபடம் இல்லாத சிரிப்பும், மழலை பேச்சுக்களுக்கும் சொந்தக்காரர்கள் தான் குழந்தைகள்.டிஜிட்டல் உலகில், பிறந்து சில வருடங்களிலேயே எண்ணற்ற சாதனைகளுக்கு சொந்தக்காரர்களாக மாறியதோடு மட்டுமல்லாமல், பெரியவர்களுக்கே சவால்விடும் பக்குவமான பேச்சுக்களையும், அறிவியல் பூர்வமான அணுகுமுறைகளையும் கொண்டுள்ளனர் இன்றைய காலத்து குழந்தைகள்.

குழந்தைகள் சிரித்தாலும், அழுதாலும், கோபப்பட்டாலும் அழகுதானே. அவர்களை கொண்டாடித்தானே ஆக வேண்டும்.

முன்னாள் பிரதமர் நேரு கேட்டுக்கொண்டதற்கு இணங்க, அழகானவண்ணத்துப்பூச்சிகள் ஆகிய குழந்தைகளை கொண்டாடுவதற்காக ஆண்டுதோறும் நவம்பர் மாதம் 14ம் தேதி குழந்தைகள் தினமாக இந்தியா முழுவதும் கொண்டாடி வருகிறோம். குழந்தைகளால் அதிகம் விரும்பப்பட்ட தலைவராகிய நேருவின் பிறந்தநாளையே குழந்தைகள் தினமாக கொண்டாடுகிறோம்.

அந்தவகையில், இன்று நாடு முழுவதும் பள்ளிகள் மற்றும் ஒவ்வொரு வீடுகளிலும் உள்ள குழந்தைகளுக்கு பெரியவர்கள் வாழ்த்துக்களை கூறி இனிப்புகளை வழங்கி வருகின்றனர். பள்ளிகளில் குழந்தைகள் தின சிறப்புக் கொண்டாட்டங்களும் நடைபெற்று வருகின்றன. அந்த வகையில் கோவை அரசு மருத்துவமனை அருகே உள்ள தனியார் பெண்கள் மேல் நிலைப்பள்ளியில் குழந்தைகள் தின கொண்டாட்டம் நடைபெற்றது.

இதில் ஒன்று முதல் 12ம் வகுப்பு வரை படிக்கும் சிறுமிகளின் கலை நிகழ்ச்சிகள் இடம்பெற்றன. இதில் ஒன்றாம் வகுப்பு படிக்கும் 50க்கும் மேற்பட்ட குட்டி சுட்டீஸ் ஒரே நேரத்தில் ஒரு சேர நடனமாடியது காண்போரை வியப்பில்ஆழ்த்தியது

Published by:Karthick S
First published:

Tags: Coimbatore, Local News