ஹோம் /கோயம்புத்தூர் /

கோவை குறிச்சி குளக்கரையில் கோடிக்கணக்கில் வீணாகுது மக்கள் வரிப்பணம்..!

கோவை குறிச்சி குளக்கரையில் கோடிக்கணக்கில் வீணாகுது மக்கள் வரிப்பணம்..!

X
கோவை

கோவை

Coimbatore News : கோவையின் குளக்கரையில் வீணாகுது கோடிகள்..!

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Coimbatore, India

கோவை மாநகராட்சியில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் ரூ.350 கோடி செலவில் உக்கடம் பெரியகுளம், வாலாங்குளம், குறிச்சி, முத்தண்ணன் குளம், செல்வ சிந்தாமணி, கிருஷ்ணாம்பதி, செல்வாம்பதி ஆகிய 7 குளங்களின் கரைகளை பலப்படுத்தி அழகுபடுத்தி மேம்படுத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டது.

அதைத்தொடர்ந்து பணிகள் தொடங்கி நடைபெற்றன. இதில் உக்கடம், வாலாங்குளத்தில் பணிகள் முடிக்கப்பட்டு பொது மக்களின் பயன்பாட்டுக்குத் திறக்கப்பட்டு உள்ளன. இந்த குளத்தில் படகு சவாரி வசதியும் செய்யப்பட்டு உள்ளது.

இதுபோன்று குறிச்சி குளக்கரையிலும் நடைபாதை, வண்ண விளக்குகள், இருக்கைகள் அமைக்கும் பணி மேற்கொள்ளப்பட்டது. சட்டமன்ற தேர்தலுக்குப்பின் ஆட்சி மாற்றம் ஏற்பட்டதைத் தொடர்ந்து இந்த பணிகள் நிறுத்தப்பட்டுள்ளன.

இதையும் படிங்க : கோவை வழியாக இயக்கப்படும் பல்வேறு ரயில்கள் ரத்து.. வழித்தடத்தில் மாற்றம்  - தெற்கு ரயில்வே அறிவிப்பு

இதனால் குறிச்சி குளத்தில் ஏற்படுத்தப்பட்ட கட்டுமானங்கள் மெல்ல மெல்ல சிதிலமடைந்து வருகின்றன. குளக்கரையில் போதிய பராமரிப்பு இல்லாமல், புதர்கள் செடிகள் அடர்ந்து வளர்ந்து ஆக்கிரமித்து புதர்மண்டி கிடக்கின்றன.

உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க

கட்டுமானத்திற்காக கொண்டுவரப்பட்ட கற்கள் கேட்பாரற்று கிடக்கும் நிலையில் உடனடியாக குறிச்சி குளத்தில் மேம்பாட்டுப் பணிகளை முடிக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

First published:

Tags: Coimbatore, Local News