ஹோம் /கோயம்புத்தூர் /

கோவையில் போலீசாருடன் கிரிக்கெட் போட்டியில் மோதும் பொதுமக்கள்.. ஹர்பஜன் சிங் ஆதரவு..

கோவையில் போலீசாருடன் கிரிக்கெட் போட்டியில் மோதும் பொதுமக்கள்.. ஹர்பஜன் சிங் ஆதரவு..

கோவை

கோவை - போலீசார் - பொதுமக்கள் கிரிக்கெட் போட்டி

Coimbatore Latest News | கோவையில் போலீசாருக்கும் பொதுமக்களுக்கும் இடையேயான கிரிக்கெட் போட்டி இன்று முதல் 30ம் தேதி வரை நடைபெற உள்ளது. இந்த போட்டியில் காவல் துறை சார்பில் 10 அணிகளும் பொதுமக்கள் சார்பில் 64 அணிகள் கலந்து கொள்ள உள்ளன.

மேலும் படிக்கவும் ...
  • News18 Tamil
  • 2 minute read
  • Last Updated :
  • Coimbatore | Coimbatore

கோவையில் இன்று முதல் (செப். 24-ம் தேதி)  30-ம் தேதி வரை காவல்துறையினருக்கும் பொது மக்களுக்கும் இடையிலான கிரிக்கெட் போட்டி நடைபெறவுள்ளது.

கோவையில் போலீசாருக்கும் பொதுமக்களுக்கும் இடையேயான கிரிக்கெட் போட்டி இன்று முதல் 30ம் தேதி வரை நடைபெற உள்ளது. இந்த போட்டியில் காவல் துறை சார்பில் 10 அணிகளும் பொதுமக்கள் சார்பில் 64 அணிகள் கலந்து கொள்ள உள்ளன.

முதல் கட்டமாக காவல் துறை அணியினர் தனியாகவும், பொதுமக்கள் அணியினர் தனியாகவும் போட்டியிடுவர். இந்த போட்டிகள் கோவை அரசு பொறியியல் கல்லூரி மைதானத்தில் நடைபெறும்.

மேலும் படிக்க:  122 ஆண்டுகள் பழமையான கல்லாறு பழப்பண்ணை மூடப்படுகிறதா?  சுற்றுலா பயணிகள் அதிர்ச்சி

போட்டிகளில் பங்கேற்பதுடன் பொது மக்கள் இந்த போட்டிகளைக் காணவும் அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. இதனிடையே கிரிக்கெட் போட்டி குறித்து பொதுமக்கள் மத்தியில் விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக கையெழுத்து இயக்கம் தொடங்கப்பட்டுள்ளது.

காவல்துறை வாகனத்தில் கிரிக்கெட் போட்டியின் கோப்பைகளுடன் ஒவ்வொரு கல்லூரிக்கும் இந்த கையெழுத்து இயக்கம் செல்கிறது. காவல் துறையினருக்கான போட்டியில் வெற்றிபெறும் அணியும் பொதுமக்களுக்கான போட்டியில் வெற்றிபெறும் அணியும் அக்டோபர் 2-ம் தேதி நடைபெறும் இறுதிப் போட்டியில் மோதுவர். இந்த போட்டி பி.எஸ்.ஜி இன்ஸ்டிட்யூட் ஆப் மேனேஜ்மென்ட் மைதானத்தில் நடைபெறும்.

மேலும் படிக்க:  கோவையில் மாணவர்களை தேடிச்செல்கிறது நடமாடும் நூலகம்.. பொதுமக்களும் படிக்கலாம்.. எங்கெல்லாம் செல்கிறது தெரியுமா?

வெற்றிபெறும் அணிகளுக்கு ரூ. 25 ஆயிரத்திற்கான பரிசுத் தொகை அறிவிக்கப்பட்டுள்ளது. காவல் துறையின் இந்த முயற்சிக்கு இந்திய கிரிக்கெட் வீரர் ஹர்பஜன் சிங் ஆதரவு அளித்து வாழ்த்து தெரிவித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

இது குறித்து காவல் ஆணையர் பாலகிருஷ்ணன் கூறுகையில்  "காவல் துறையினர் மற்றும் பொதுமக்களிடையே இணக்கமான சூழலை உருவாக்கும் முயற்சியில் இந்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.இதன் மூலம் இளைஞர்கள் மத்தியில் விளையாட்டு ஆர்வத்தை ஏற்படுத்தி, போதைப் பொருட்களுக்கு அடிமையாவதை தடுக்கவும், விழிப்புணர்வு ஏற்படுத்தவும் திட்டமிட்டுள்ளோம்.

உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க

மேலும் இளைஞர்கள் இரு சக்கர வாகனங்களில் அதிவேகமாகச் சென்று ஏற்படும் விபத்துகளைத் தடுக்கும் வகையிலான விழிப்புணர்வுகளை ஏற்படுத்தும் முயற்சியாக நடைபெற உள்ளது." என்றார்.

Published by:Arun
First published:

Tags: Coimbatore, Local News