ஹோம் /கோயம்புத்தூர் /

கோவையில் தயார் நிலையில் கொரோனா படுக்கைகள்...!

கோவையில் தயார் நிலையில் கொரோனா படுக்கைகள்...!

X
தயார்

தயார் நிலையில் கொரோனா படுக்கைகள்

Coimbatore News : கோவையில் தயார் நிலையில் கொரோனா படுக்கைகள்...!

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Coimbatore, India

கொரோனா வைரஸ் தொற்று தற்போது மீண்டும் பரவி வரும் சூழலில் கோவை அரசு மருத்துவமனையில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கொரோனா சிகிச்சைக்கான படுக்கைகள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன.

சீனா, ஜப்பான் உள்பட சில வெளிநாடுகளில் பி.எப்.7 என்ற புதிய வகை கொரோனா தொற்று வேகமாக பரவி வருகிறது. கடுமையான பாதிப்புகளையும் ஏற்படுத்தி வருவதால் கட்டுப்படுத்த முடியாமல் அந்த நாடுகள் திணறுகின்றன.

இந்தியாவில் கொரோனா பரவலை தடுத்து கட்டுப்படுத்தும் முயற்சியில் மத்திய அரசு தீவிரமாக ஈடுபட்டுள்ளது. இதனிடையே ஒவ்வொரு மாவட்டத்திலும் உள்ள அரசு தலைமை மருத்துவமனையில் கொரோனா சிகிச்சைக்கான படுக்கைகளை தயார் நிலையில் வைக்க தமிழக சுகாதாரத்துறை உத்தரவிட்டுள்ளது.

இதையும் படிங்க : கோவையில் இருந்து 100 கி.மீ. சுற்றளவில் பார்க்க வேண்டிய பசுமையான சுற்றுலா தலங்கள்

இந்நிலையில், கோவை அரசு மருத்துவமனையில் கொரோனா சிகிச்சைக்கான படுக்கைகளை மருத்துவமனை நிர்வாகம் தயார்படுத்தியுள்ளது. இதற்காக பிரத்தியேக வார்டு ஒதுக்கப்பட்டுள்ளது.

ஆண்கள், பெண்களுக்கு என மொத்தம் 25 படுக்கைகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. இந்த வார்டுக்குள் ஆக்சிஜன் செரிவூட்டிகள், கான்செண்ட்ரேடர், சிகிச்சைக்கான மருந்துகள் மற்றும் சிகிச்சை அளிக்கும் மருத்துவர்களுக்கான பி.பி.இ கிட்டுகள் வைக்கப்பட்டுள்ளன.

உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க

இந்த வார்டினுள்ளேயே ஆண்கள் மற்றும் பெண்களுக்கான கழிவறைகள் உள்ளன. மேலும், நோயாளியுடன் வருபவர்களுக்காக வார்டின் வெளிப்புறத்தில் இருக்கைகள் அமைக்கப்பட்டுள்ளன. முன்று சிப்டு அடிப்படையில் 24 மணி நேரமும் மருத்துவர் மற்றும் செவிலியர்கள் கொரோனா சிகிச்சைக்கான வார்டில் பணியமர்த்தப்பட்டுள்ளனர்.

முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக இந்த படுக்கை வசதிகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாகவும், தேவைப்பட்டால் படுக்கைகள் உடனடியாக அதிகரிக்கப்படும் என்றும் மருத்துவமனை நிர்வாகத்தினர் தெரிவித்துள்ளனர்.

செய்தியாளர் : சவுந்தர் மோகன் - கோவை

First published:

Tags: Coimbatore, Corona, Local News