Home /coimbatore /

கோவை உணவுத்திருவிழாவில் காண்டினென்டல் காஃபி..! டேஸ்ட் எப்படி இருக்கு.? 

கோவை உணவுத்திருவிழாவில் காண்டினென்டல் காஃபி..! டேஸ்ட் எப்படி இருக்கு.? 

கோவை

கோவை உணவுத் திருவிழா

News18 Food Festival: கோவையில் நியூஸ் 18 தொலைக்காட்சி சார்பில் உணவுத்திருவிழா -2022 ப்ரோசோன் வணிக வளாகத்தில் நடைபெற்றது.

    கோவையில் நியூஸ் 18 தொலைக்காட்சி சார்பில் உணவுத்திருவிழா -2022 ப்ரோசோன் வணிக வளாகத்தில் நடைபெற்றது.

    மூன்று நாட்கள் நடைபெற்ற இந்த உணவுத்திருவிழாவில் பல்வேறு வகையான உணவு வகைகள், குழந்தைகளுக்கான பொழுதுபோக்கு அம்சங்கள் இடம்பெற்றது. நாள்தோறும் விளையாட்டு மற்றும் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றது.

    இந்த உணவுத்திருவிழாவில், காண்டினென்டல் காஃபி நிறுவனத்தின் ஸ்டால் அமைக்கப்பட்டுள்ளது. கண்காட்சியை பார்வையிட வந்த பொதுமக்களுக்கு அங்கேயே காஃபி தயாரித்து கொடுக்கப்பட்டது. மேலும், பல்வேறு விதமான காஃபி பொடிகளும் விற்பனை செய்யப்பட்டது.

    இதுகுறித்து காண்டினென்டல் காஃபி நிறுவன பிரதிநிதிகள் கூறுகையில், "வாடிக்கையாளர்கள் அதிக அளவில் இங்கு வருகிறார்கள். மக்கள் கூட்டம் அதிகம் வரும் இடத்தில் காண்டினென்டல் காஃபி ஸ்டால் அமைத்துள்ளது எங்களது வாடிக்கையாளர்கள் எண்ணிக்கையை அதிகரிக்கும். ஆண்டுதோறும் இந்த உணவுத் திருவிழா நடைபெற வேண்டும்" என்றனர்.

    செய்தியாளர் : சௌந்தர்மோகன்
    Published by:Arun
    First published:

    Tags: Coimbatore

    அடுத்த செய்தி