முகப்பு /கோயம்புத்தூர் /

கோவையில் குற்றங்கள் குறித்து வீடியோ கான்பரன்ஸ் மூலம் புகார் அளிக்கலாம் - போலீஸ் கமிஷ்னர்

கோவையில் குற்றங்கள் குறித்து வீடியோ கான்பரன்ஸ் மூலம் புகார் அளிக்கலாம் - போலீஸ் கமிஷ்னர்

கோவை

கோவை

Complaints can now be filed through video conferencing | கடந்த சட்டமன்ற கூட்ட தொடரில் முதல்வர் ஸ்டாலின் அறிவித்தவாறு வீட்டில் இருந்த படியே வீடியோ கான்பரன்ஸ் ( காணொளி காட்சி) மூலம் புகார் அளிக்கலாம் என்று கோவை மாநகர போலீஸ் கமிஷ்னர் அலுவலகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

மேலும் படிக்கவும் ...
  • Last Updated :
  • Coimbatore, India

கடந்த சட்டமன்ற கூட்டத்தொடரில் முதல்வர் ஸ்டாலின் அறிவித்தவாறு வீட்டில் இருந்தபடியே வீடியோ கான்பரன்ஸ் ( காணொளி காட்சி) மூலம் புகார் அளிக்கலாம் என்று கோவை மாநகர போலீஸ் கமிஷனர் அலுவலகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் அதிகரித்து வரும் குற்றச் சம்பவங்களை தடுக்கும் விதமாக பல்வேறு நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. தொழில் நுட்பங்கள் அதிகாரித்துள்ள போதிலும், புகார் அளிக்க காவல் நிலையங்கள் தான் செல்ல வேண்டும் .

இதையும் படிங்க ; கோவை மாவட்ட ஓய்வூதியதாரர்களுக்கு ஓர் முக்கிய அறிவிப்பு - இந்த வாய்ப்பை மிஸ் பண்ணாதீங்க!

இந்நிலையில், தமிழகத்தில் வீடியோ கான்பரன்ஸ் மூலம் புகார் அளிக்கும் வசதி அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

கோவை மாநகர போலீஸ் கமிஷனர் அலுவலகம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது: தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் கடந்த 13-ம் தேதி நடைபெற்ற சட்டமன்ற கூட்டத்தில் குற்றச்சம்பவங்கள் குறித்து பொதுமக்கள் இனிமேல் வீட்டில் இருந்த படியே புகார் அளிக்கலாம் என்று அறிவித்தார்.

இதையும் படிங்க; 122 ஆண்டுகள் பழமையான கல்லாறு பழப்பண்ணை மூடப்படுகிறதா?  சுற்றுலா பயணிகள் அதிர்ச்சி

 அந்த அறிவிப்பின்படி கோவை மாநகரில் பொதுமக்களின் குறைதீர்க்கும் நிகழ்ச்சி தொடர்பாக பொதுமக்கள் குறிப்பாக முதியோர் மற்றும் பெண்கள் நலன் கருதி அதிகாரிகளை தேடி கோவை மாநகர போலீஸ் கமிஷனர் அலுவலகம் வர தேவையில்லை.

தங்களது இருப்பிடத்திலிருந்து கோவை மாநகர போலீஸ் கமிஷ்னர் பாலகிருஷ்ணனை காணொளி காட்சி மூலம் நேரடியாக தொடர்பு கொண்டு தங்களது குறைகளை தெரிவிக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.

பொதுமக்கள் தங்களது புகார்களை ஆன்லைன் (ID:onlinegrievance.copcbe@gmail.com) அனுப்பி வைக்கப்படும் பட்சத்தில் தங்களது இ-மெயிலுக்கு கூகுள் மீட்டிங் லிங்க் ( https://meet288.webex.com/meet/pr26411062314) அனுப்பி வைக்கப்படும்.

உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க

top videos

    ஒவ்வொரு வாரமும் திங்கட்கிழமை 12 மணி முதல் மதியம் 1 மணி வரை, கூகுள் மீட் மூலம் கோவை மாநகர போலீஸ் கமிஷ்னரை தொடர்பு கொண்டு புகார் குறித்த கருத்துகளை தெரிவிக்கலாம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    First published:

    Tags: Coimbatore, Local News