ஹோம் /கோயம்புத்தூர் /

கோவையில் சட்டவிரோதமாக  விற்கப்படும் செங்கற்கள்.. நடவடிக்கை எடுக்குமா மாவட்ட நிர்வாகம்?

கோவையில் சட்டவிரோதமாக  விற்கப்படும் செங்கற்கள்.. நடவடிக்கை எடுக்குமா மாவட்ட நிர்வாகம்?

X
தடாகம்

தடாகம் பள்ளத்தாக்கு பாதுகாப்பு குழுவினர்

Coimbatore Illegal Bricks Sales | கோவை தடாகம் பள்ளத்தாக்கு பகுதியில் 177 செங்கல் சூளைகள், உயர் நீதிமன்ற உத்திரவின் பேரில் ஒரு ஆண்டுக்கு மேலாக மூடப்பட்டுள்ளன.

  • News18 Tamil
  • 2 minute read
  • Last Updated :
  • Coimbatore, India

கோவையில் செங்கற்கள் சட்டவிரோதமாக  விற்கப்படுவது தொடர்பாக மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்கவில்லை என புகார் எழுந்துள்ளது.

புவியியல் சுரங்கத்துறை ஆணையரின் உத்தரவிற்கு பிறகு செங்கல் சூளைகள் இயக்கப்பட்டதா என்பது குறித்து மாவட்ட ஆட்சியர் அறிக்கை தாக்கல் செய்யுமாறு சென்னை உயர் நீதிமன்ற நீதிபதிகள் உத்திரவிட்டுள்ள சூழலில், செங்கற்கள் திருட்டுத்தனமாக விற்கப்பட்டதாக தடாகம் பள்ளத்தாக்கு பாதுகாப்பு குழுவினர் மாவட்ட வருவாய் அலுவலரிடம் புகார் அளித்தனர்.

கோவை தடாகம் பள்ளத்தாக்கு பகுதியில் 177 செங்கல் சூளைகள், உயர் நீதிமன்ற உத்திரவின் பேரில் ஒரு ஆண்டுக்கு மேலாக மூடப்பட்டுள்ளன. இந்த செங்கல் சூளை உரிமையாளர்கள், கனிமவள திருட்டு மற்றும் தமிழ்நாடு மாசுக்கட்டுபாட்டு வாரியத்திற்கு இழப்பீடு ஏற்படுத்தியதாக ரூ.433 கோடி  அபராதம் செலுத்த ஆட்சியர் தலைமையிலான குழுவினர் நீதிமன்றத்திற்கு அறிக்கை அளித்து இருந்தனர்.

இந்நிலையில் கடந்த 29 ஆம் தேதி புவியியல் மற்றும் சுரங்கத்துறை ஆணையர் ஜெயகாந்தன் ஏற்கனவே விதிக்கப்பட்ட அபராத தொகையான ரூ.433 கோடியை தவிர்த்து, ரூ.13.10 கோடி அபராதம் கட்டி வேக வைத்த மற்றும் பச்சை செங்கற்களை எடுத்து விற்பனை செய்து கொள்ளலாம் என ஆணை பிறப்பித்துள்ளார்.

உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க

செங்கல் சூளை உரிமையாளர்களுக்கு ஆதரவாக செயல்பட்ட ஆணையருக்கு எதிராக, தடை உத்தரவு பிறப்பிக்கக்கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் தடாகம் இயற்கை பாதுகாப்பு உறுப்பினர் வழக்கு தொடுத்தார். சென்னை உயர்நீதிமன்ற நீதிபதிகள் புவியியல் மற்றும் சுரங்கத்துறை ஆணையரின் உத்திரவை தடை செய்தும், நீதிமன்றத்தில் ஆஜராகவும், செங்கல் எடுக்கக்கூடாது என உத்தரவு பிறப்பித்திருந்தனர்.

அப்படி செங்கல் எடுத்து விற்பனை செய்யப்பட்டிருந்தால் அது தொடர்பான விசாரணை நடத்தி மாவட்ட ஆட்சியர் அறிக்கை அளிக்க உத்திரவிட்டிருந்தனர். இதனிடையே தடாகம் பாதுகாப்புக்குழுவினர், 1500 லாரிகளில் பச்சை மற்றும் வேக வைத்த செங்கற்கள் எடுத்துச்செல்லப்பட்டு விற்கப்பட்டதாக குற்றம் சாட்டினர். அதற்கான ஆதாரங்களை இணைத்து புகாராக மாவட்ட வருவாய் அலுவலரிடம் கொடுத்தனர். மாவட்ட நிர்வாகம் செங்கல் சூளைகள் மீது உரிய நடவடிக்கை எடுக்கவில்லை என்றால், நீதிமன்றத்தில் இதுகுறித்த ஆவணங்களை சமர்பிக்க இருப்பதாக தெரிவித்தனர்.

First published:

Tags: Coimbatore, Local News